சாட்சிகள் Jeffersonville, Indiana, USA 53-0405E 1மாலை வணக்கம், நண்பர்களே. இன்றிரவு இங்கேயிருந்து கர்த்தருக்கு சேவை செய்வதென்பது மிக மகிழ்ச்சியான தாயுள்ளது. கடந்த இரண்டு வாரமானது நமக்கு மிகவும் மகிமையான ஒன்றாக இருந்தது. சகோதரன் நெவில் என்னை பின்னால் இருக்கின்ற அறைக்கு அழைத்துச் சென்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய நூறு பேர் கர்த்தரிடம் மனம் மாறி வந்திருப்பதாகவும், ஏறக்குறைய ஐம்பது பேர் ஞானஸ்நானங்கள், தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாக கூறினார். அது பயனுடையதாகும். அப்படித்தானே? (சபையார் ''ஆமென் என்கின்றனர் - ஆசி] அதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். இன்றிரவு நம் வாசல்களில் வெளியார் (Strangers) இருப் பதைக் குறித்து மகிழ்ச்சி. தேவன் உங்களை நிறைவாக அதிகமாக ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். தேவனுடைய மகிமைக்காக ஏதாவதொரு காரியம் செய்யும்படியாக இந்த கூட்டத்தில் பிரயாசப்பட்ட ஒவ்வொருவருக்கும் நாங்கள் சகோதரன் டாம் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். 2ஆகவே மேலும் சகோதரன் டாம் மெரிடித், சகோதரி மெரிடித் மற்றும் சிறிய மெரிடித், இருவருக்கும், மற்றும் எல்லாருக்கும், அவர்களுடைய பாடல்களுக்காகவும், இசைக்காகவும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். அவர்கள் பிரான்ஹாம் கூடாரத்துக்கு எந்த சமயத்திலும் திரும்பவும் வர நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். அவ்வாறு உணர்கிறவர்கள் எல்லாரும் “ஆமென்' என்று கூறவும் (சபையார், ''ஆமென் என்கின்றனர் - ஆசி]. நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சகோ. மெரிடி நீங்கள் அறிகிறீர்களா, சகோதரன் மெரிடித் அவர்களை நான் சிறிது காலத்திற்கு முன்பு சந்தித்தேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். சகோதரன் நெவில், மற்றும் சகோதரன் மெரிடித் இருவரும் தங்கள் வீரமுள்ள பிரசங்கத்திற்காக, மற்றும் உதவியாக நிற்பது, அவர்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி கூறுகிறோம். 3சகோதரன் நெவில், இங்கே இந்தச் சபையில் உம்மை எங்களுடைய மேய்ப்பராக நாங்கள் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய ஆழமான அன்பு உங்களுக்காக இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் சகோதரன் நெவிலிடம் நம்பிக்கை கொண்டி ருக்கிறேன்; அவருடைய கடந்த வாழ்க்கையைப் பின்னிட்டுப் பார்க்கையில் ''எனக்கு பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் எனக்கு ஒரு பிரசங்கமாக வாழு' என்னும் பழைய பழமொழியை நீங்கள் அறிவீர்கள், அதில் நிறைய உண்மை இருக்கின்றது. ஆகவே, மந்தைக்குள்ளாக சற்று முன்பு கொண்டு வரப்பட்ட இந்த ஆடுகளை மேய்க்கும் பணியை ஏற்றுக்கொள்ள இங்கே நம்முடன் சகோதரன் நெவில் இருப்பதைக் குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. கர்த்தராகிய இயேசு நம்முடைய சகோதரனை ஆசீர்வதிப்பாராக! ஆகவே கண்காணிப்பாளர்கள் மற்றும்... ஒவ்வொருவரும், அதை நாங்கள் பாராட்டுகிறோம். 4நம்மிடையே சகோதரன் கிட்டு இருக்கிறார், அப்படி என்று நான் விசுவாசிக்கிறேன், இன்னும் அநேக பல்வேறு ஊழியக் காரர்கள், சகோதரன் ஹவர் இங்குள்ளனர். இன்றிரவு சகோதரன் ஹவர் இருக்கின்றாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் எங்களுடன் இருந்தார், இந்த காலை ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். சகோதரன் பீலர், சுவிசேஷத்தில் எங்கள் பழைய நண்பரும், உடன் தோழருமானவர், அவ்விதமாக கூறுவதற்கு நீர் என்னை அனுமதிப்பீரானால், அவரையும் அவருடைய ஒத்துழைப்பையும் நாம் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கூட்டத்தின் குறிப்புகளையும் இன்னும் மற்றவைகளையும் அவர் குறித்துக் கொண்டு வருகிறார். ஆகவே அவர் அதை மேலும் மேலுமாக அநேக காலத்திற்கு வாழ்ந்து காட்டுவார் என்று நான் யூகிக்கிறேன். ஆதலால் எல்லாருக்காகவும் விசேஷ பாடல்கள் பாடிய உங்களுக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக, அதுவே என்னுடைய ஜெபம். 5இன்றிரவு சிறிது களைப்பாக இருக்கிறது. போதுமான ஓய்வு எனக்கு இருக்கவில்லை. கடந்த இரவு இரட்டை பிரசங்கமாக இருந்தது, சுமார் ஒரு மணிக்கு நான் உறங்கச் சென்றேன். மறுபடியும்மாக இந்த காலை எழுந்து கொண்டேன், அதிகாலை சூரிய உதய ஆராதனை . பிறகு ஏறக்குறைய தண்ணீரில் இரண்டு மணி நேரம் நின்று ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். தண்ணீர் மிகவும் குளுமையாக சில்லென்று இருந்தது, அப்படித்தானே, நண்பர்களே? [சபையார் ஆமென் '' என்கின்றனர் - ஆசி). ஓ, நான் பார்த்ததிலேயே, நான் உணர்ந்த திலேயே மிகவும் குளுமையான தண்ணீராக அது இருந்தது. என்னே , என்னால்... எனக்கு மிகவும் மரத்துப்போனது. நான்... அங்கே அதிலிருந்து வெளியே வரும்போது, நான் அடியெடுத்து மேலே வைக்கிறேனா அல்லது கீழே வைக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆதலால், நான் வீடு சென்ற போதும் கூட என்னுடைய கால் விறைப்பு தளரவேயில்லை, என்னுடைய மனைவி இரவு ஆகாரம் தயார்'' என்றார்கள். நான் பெரிய குளிக்கும் தொட்டியில் சூடான தண்ணீரில் குதித்தேன், சிறிது அனல் மூட்டி கொண்டு, பிறகு என் ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு அடக்க ஆராதனைக்கு சென்று விட்டேன். ஆகவே ஒரு அடக்க ஆராதனையை நாங்கள் நடத்தினோம். 6நான் வீடு திரும்பின உடனே மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது, ஆகவே நான் திரும்பி மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியதாய் இருந்தது. இரவு ஆகாரம் உண்ணவேயில்லை. நான்... சகோதரன் மெக்ஸ் பாடினும் (McSpaddin) எங்கள் குழுவும், முடித்த பிறகு, சிறிது நேரத்திற்கு முன்னர் சிறிய இரவு உணவை சாப்பிட்டோம். ஆகவே எழுப்புதலின் முடிவாக இந்த மாலை ஆராதனைக்கு இப்பொழுது திரும்பி வந்துவிட்டேன். இந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சி கொள்கிறோம். சிறிது தொண்டை கரகரப்பாக உள்ளது. ஆதலால் என்னுடன் நீங்கள் சற்று பொறுத்துக் கொள்வீர்கள். 7இக்காலை நான் விசுவாசியைத் தொடரும் அடையாளங்கள் என்பதைக் குறித்து பேசப்போகிறேன்'' என்று கூறினேன். இக்காலை நான் கூறினபோது, என்ன அல்லது இந்த சபையிலுள்ள தர்மகர்த்தாக்களில் ஒருவர் என்னிடம், சகோதரன் பில், இன்றிரவு - இராப்போஜன இரவு என்று உமக்கும் நினைவிருக்கும் என்று இந்த மாலையில் கூறின் வரையிலும் எனக்கு அது தெரியாதிருந்தது. நான் “ஓ, என்னே , நாம் மறுபடியும் இங்கே இருக்கிறோம்'' என்று நினைத்தேன். ஆதலால் நான் திரும்பவுமாக சென்று ''கர்த்தாவே, இப்பொழுது எதைக் குறித்து நான் பேசுவது?'' என்று எண்ணினேன். விசுவாசியைத் தொடரும் அடையாளங்கள்' என்பதன் பேரில் நான் அநேக வேத வசனங்களை எழுதி வைத்திருந்தேன், அவைகளில் அநேக வசனங்களை குறிப்பிடலாம் என்றிருந்தேன். ஆதலால் அதில் சில மாறுதலை நான் செய்ய வேண்டியதாயிற்று. ஆகவே இப்பொழுது, ஒருக்கால் நாம் இராப்போஜன ஆராதனையைக் கொண்டிருப்போம், இந்த மகத்தான விருந்திற்கு எங்களுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உயிர்த்தெழுதலிற்குப் பிறகு இராப்போஜனம் எடுப்பது என்ன ஒரு அழகான சமயமாக இருக்கிறது. அதே காலங்களில் இப்பொழுது சரியாக பரிசுத்த ஆவியானவர் இறங்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் இறங்க ஒரு அருமையான சமயமும் ஆகும். 8ஆதலால் இன்றிரவு, அந்த சீட்டை நான் இழக்கவில்லை என்று நான் நம்புகிறேன். பில்லி கிரகாமின் அமெரிக்க ஐக்கிய நாட்டின் எண்ணெய் என்னும் சுவிசேஷப் படம் லூயி வில்லில் காண்பிக்கப்படுகின்றது. ஏப்ரல் இருபதாம் தேதி, மெமோரியல் காட்சியரங்கில் நான்...பில்லி கிரஹாமின் உதவியாளர்களில் ஒருவர் அதை நான் என்னுடைய சபையில் அறிவிக்க முடியுமா என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். அவர் தன்னுடைய அட்டையை எனக்குக் கொடுத்தார். ஆதலால் நான்...அது உங்களுக்கு சிரமம் இல்லாமலிருக்கும் பட்சத்தில், நீங்கள் அதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அது நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். திரு. டெக்ஸாஸ் என்னும் படத்தை சமீபமாக நாம் கொண்டிருந்தோம். உங்களில் அநேகர் அதைப் பார்த்தீர்கள், மிக அருமையான படம். அவைகளில் எதையும் நான் பார்க்க வேயில்லை. ஆனால் அதைக் குறித்ததான அநேக கருத்துக்களை நான் கேட்டேன். அது ஏப்ரல் இருபதாம் தேதி லூயிவில்லில் உள்ள மெமோரியல் காட்சியரங்கத்தில் இருக்கும். 9ஆகவே இப்பொழுது கூட அங்கே இருக்கின்ற அரங்கத்தில் ஒரு எழுப்புதல் இந்த வாரம் நடைபெறப் போகிறது என்று நான் நம்புகிறேன். அங்கே யாரோ ஒரு வாலிப சுவிசேஷகன் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கே இருக்க உங்களால் முடியும்மானால், அவர்கள் அதை பாராட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு தெரியும் எப்படி... நான் உங்களுக்கு கூறுகிறேன், ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொரு எழுப்புதலில், நான் செய்ய வேண்டிய காரியம் எதுவுமே இருக்கக்கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன், அது என்னவென்றால், தீ அனல்களில் நான் உங்களுடனே சேர்ந்து இருந்து அனல் மூட்டிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் அப்படித் தானே? [சபையார் “ ஆமென்'' என்கின்றனர் - ஆசி]. அது அருமையானது. சகோதரன் மெரிடி, உம்முடைய ஒலிபரப்பு எதில் வருகின்றது என்பதையும் மற்றவையும் நீங்கள் ஜனங்களுக்கு அறிவித்து விட்டீர்களா? (சகோதரன் மெரிடித் “இல்லை சகோதரன் பிரான்ஹாம்'' என்கிறார் - ஆசி நல்லது இப்பொழுது நீர் இங்கே வந்து அதைச் செய்வீரா? சகோதரன் மெரிடித் அறிவிப்பார், அவருடைய ... [சகோதரன் டாம் மெரிடித் அவருடைய WTCO AM 150 யில் வருகின்ற . அவருடைய தினசரி வானொலி நிகழ்ச்சியின் நேரங்களை அறிவிக்கிறார்) உமக்கு நன்றி , சகோதரன் டாம். அறிவிக்கப்படத்தக்கதாக, விசேஷமான ஒன்றை அல்லது ஊழியங்களில் ஒன்றை, எழுப்புதல் இருக்கிறதென்று யாராவது கூற இருக்கிறீர்களா? நம்முடைய சகோதரரையும் அவர்களுடைய ஊழியங்களையும் அங்கீகரிக்க நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி கொள்கிறோம். இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 10ஆகவே, இப்பொழுது உங்களால் கூடுமானால், இந்த ஆராதனைக்குப் பிறகு நடைபெறவிருக்கின்ற, இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதலுக்கான பேசும் ஆராதனையில் எங்களுடன் தங்க மறந்து போகாதீர்கள். கால் கழுவுதலைப் பற்றி எத்தனை பேர் கேள்விப்பட்டதுண்டு? [சபையார் ஆமென்' என்கின்றனர் - ஆசி நல்லது, ஒரு சட்டையில் சட்டைப்பை, பாக்கெட் இருப்பது போன்று நீங்களும் இங்கே வீட்டில் இருப்பது போல உணர்வீர்கள். இப்பொழுது, நாம் அறிகிறோம், வேதம் அதை போதிப்பதால் நாம் அதை விசுவாசிக்கிறோம். ஆதலால் நீங்கள் தங்கி எங்களுடன் நீங்கள் இருக்க நாங்கள் - நாங்கள் விரும்புகிறோம். கென்டக்கியில் உள்ள பழைய - நாகரீக பாப்டிஸ்டுகள், எப்படி நாங்கள் தரையில் உட்கார்ந்து இரவு ஆகாரம் உண்போம் என்பதை நினைவு கூருகிறீர்களா? மக்கள் எழுந்து போர்கஸ் ஆப் கிரிக்கில் நாங்கள் பாடுவது போன்று பாடுவார்கள். (உங்களுக்கு நினைவிருக்கிறதா?) 'ஆச்சரியமான கிருபை, எவ்வளவு இனிமையாக தொனிக்கிறது! சகோதரர் எல்லாரும் இருந்த மரத்தின் நிழலில் சென்று கால்களைக் கழுவிக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டிருப்பதுமாக இருப்பர். அவர்கள் உண்மையான பாப்டிஸ்டுகள். பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் இப்பொழுது செய்வது போல நாங்கள் ஒருவர் கையை ஒருவர் குலுக்குவதில்லை. ஒருவரோடு ஒருவர் தோள்களில் தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருப்போம். அவர்களிடம் உண்மையாக ஏதோ ஒன்று இருந்தது. அந்த பாப்டிஸ்டுகளை விட நாம் அதிகமாகக் கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே? (சபையார் ஆமென் என் கின்றனர் - ஆசி). அது சரி. . கால்களைக் கழுவுதலை இன்னுமாக நாங்கள் செய்து கொண்டு வருகிறோம், கூடுமானால் இன்றிரவு நீங்களும் எங்களுடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நானும் பேசிக் கொண்டேயிருப்பதை நான் நிறுத்த முயற்சிக்கின்றேன், ஏனெனில் என் தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது. ஆகவே எனக்காக இப்பொழுது ஜெபியுங்கள். 11ஆகவே இப்பொழுது புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலருடைய நடபடிகள் ஆம் அதிகாரத்திலிருந்து சிலவற்றை நான் வாசிக்க விரும்புகிறேன். இது அப்போஸ்தலர்களில் பரிசுத்த ஆவியானவருடைய நடபடிகள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் வந்த பிறகு பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் அவ்விதமாக கிரியைச் செய்யும்படி செய்தார். இப்பொழுது 8-வது வசனத்தில் இதை நாம் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். ஆகவே இப்பொழுது, சிறிது நேரத்திற்கு சாட்சிகள் என்னும் பொருளை நான் உபயோகிக்க விரும்புகிறேன். 12ஆகவே, இப்பொழுது, அடுத்ததாக நாம் ஜெபம் செய்யும் படியாக நாம் நமது தலைகளை வணங்குவோம், நீங்கள் செய்வீர்களா. நம்முடைய சகோதரி என்னுடன் நடவுங்கள் அல்லது அதைப் போன்ற ஒரு ஸ்ருதியை நமக்கு இசைப்பார்களானால், சகோதரியே, அப்படி செய்வீர்களா? இப்பொழுது, இங்குள்ள ஒவ்வொரு நபருக்கும் தேவை இருக்கின்றது. உங்கள் உயர்த்தப்பட்ட கையின் மூலமாக நீங்கள் அதை தேவனுக்கு தெரியப்படுத்தும் வகையில் அதைச் செய்வீர்களா? கர்த்தாவே, எனக்கு - எனக்கு ஒரு தேவை இருக்கின்றது என்று தேவனிடம் தெரியப்படுத்துங்கள். என்னுடையதையும் நான் உயர்த்தியிருக்கிறேன். அவர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை உங்களுக்கு அளிப்பாராக. ஒவ்வொரு நபரும், இப்பொழுது தன்னுடைய சொந்த விதத்தில், சபையில் நீங்கள் எவ்விதம் ஜெபம் செய்கிறீர்களோ, அதே விதமாக நீங்கள் ஜெபிக்க நான் விரும்புகிறேன். 13எங்கள் பரலோகப் பிதாவே, இன்னுமொரு நாளின் முடிவில் நாங்கள் உம்மிடம் வருகின்றோம். இக்காலையில் எழும்பிக் கொண்டிருந்த அழகான சூரியன் இப்பொழுது மறைந்து போய் விட்டது, அதனுடைய இருண்ட மேகங்கள் வானில் மூடிக் கொண்டிருக்கின்றது. இந்த நாளிற்காகவும் கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அந்த மகத்தான நினைவு நாளிற்காகவும் நாங்கள் கொண்டிருந்த அந்நாளின் நினைவுகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உண்மையாக, இயற்கையான சூரிய அஸ்தமனத்தைப் போலவே, நேரத்தின் (Time) அஸ்தமனமும் இன்னும் சீக்கிரத் தில் இருக்கும். எல்லாம் இருளாக இன்னுமாக நீண்ட நேரம் இல்லை. அந்த நேரத்தை கடக்க இங்கே அநேகம் பேர் விடப்படுவர், அதே போன்று முடிந்து போன பழமை நாகரீக எழுப்புதலிற்காக எப்படிப்பட்ட ஓர் பசி தாகம் இருக்கும். தேவனே, சற்று முன்னர் விபத்தில் சிக்கி நுரையீரலில் ஒன்று சேதமாகி அங்கே மருத்துவமனையில் இருக்கின்ற அந்த வாலிப ஸ்திரீக்காக நான் ஜெபிக்கிறேன். அவளுடைய கணவனை கிழித்து, நசுக்கிப் போட்டது; அவளுடைய இருதயம் மறுபக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முற்றிலுமாக மருத்துவர்களால் முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது நீர் இரக்கமாயிருக்கமாட்டீரா? அங்கே படுக்கையில் திணறிக் கொண்டு, மரித்துக் கொண் டிருக்கும் திரு. பிரிட்சார்டை நினைவுகூரும் கர்த்தாவே. மூச்சு திணறிக்கொண்டு சுவாசிக்க உதவும் கருவி பொருத்தப்பட்டுள்ள அவர் கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். 14அங்கே அந்த அடக்க ஆராதனை ஸ்தலத்தில், அங்கே அந்த அறையில் முழங்காலிட்டிருக்கையில், சுமார் எண்பது வயதான அந்த வயதான ஏழை ஸ்திரீ, தான் கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்று கூறினார் கள். ஆகவே அந்த அடக்க ஆராதனை ஸ்தலத்தில், தன்னுடைய பேத்தியின் அடக்க ஆராதனையில் அவர்கள் கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். தேவன் தாமே அவர்களோடு இருப்பாராக! இந்த இரண்டு வாரங்களாக கர்த்தாவே உம்மிடம் வந்தவர் களையும், இங்கே கூடாரத்தில் இருக்கின்ற எல்லாரையும் ஆசீர் வதியும். இவர்களோடு இருந்தருளும். இக்காலை ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களை ஆசீர்வதியும். அவர்கள் தாமே கிருபையிலும் கர்த்தருடைய அறிவிலும், இயேசு கிறிஸ்துவினுடைய பூரணத்தில் வரும் வரை வளருவார்களாக, பிறகு ஒரு நாளிலே அவரோடே மேகத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு, ஆகாயத்தில் அவரை சந்திக்கதக்கதாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பிறகு கர்த்தருடனே என்றென்றுமாக இருப்பார்களாக. கர்த்தாவே, இன்றிரவில் இங்கிருக்கின்ற எல்லாரையும் ஆசீர்வதியும். இங்கே யாராயினும் உம்மை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களாயின், அவர்கள் தீர்மானம் செய்யும் மணி நேரமாக இது இருக்கட்டும். அவர்கள் தாமே அருமையாக, தாழ்மையாக வந்து அவரை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளட்டும். கர்த்தாவே அதை அருளும். 15ஆகவே, இப்பொழுது, தகுதியில்லாத, பிரயோஜனமற்ற உம்முடைய ஊழியக்காரனாகிய நான், மறுபடியுமாக ஜீவ அப்பத்தை இன்றிரவு ஜனங்களுக்கு பிட்டு கொடுக்கும்படியாக சீட்டு என் பேரில் விழுந்திருக்கிறது. கர்த்தாவே நீர் இன்றிரவு எனக்கு உதவுமாறு நான் ஜெபிக்கிறேன். திரித்துவத்தின் மூன்றாவது நபராகிய பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து தேவனுடைய வார்த்தையை எடுத்து, தேவைக்கேற்றவாறே அதை ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் வைக்கட்டும். பிறகு அது விசுவாசத்தினாலே நீர் பாய்ச்சப்பட்டு, நிறைய கனிகள் பிறப்பிக்கட்டும். கர்த்தாவே அதை அருளும். நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நாங்கள் உம்மை விசுவாசித்து உமக்கு ஊழியம் செய்கின்றோம். எங்களுடைய நன்றியை இப்பொழுது ஏற்றுக்கொள்ளும். உம்முடைய பிரியமான குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 16இன்றிரவு தேவனுடைய வார்த்தையின் சிறிய ஆராய்ச்சி யுடன் நாம் துவக்குவோம். இப்பொழுது ஒவ்வொரு விசுவாசியும் எனக்காக ஜெபத்தில், ஆழ்ந்த ஜெபத்தோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையாய் இருக்கின்றது. இந்த தேவனுடைய வார்த்தையை திறக்க எந்த ஒரு மனிதனாலும் முடியாது. நாம் பக்கங்களைப் புரட்டலாம், ஆனால், பரிசுத்த ஆவியானவர் தாமே அதை திறக்க முடியும். மனிதனால் அதைச் செய்ய முடியாது. அது நம்மால் முடிந்த ஒன்றல்ல. பரலோகத்தில் இருந்த வேதாகமத்தைக் கண்டு யோவான், 'வானத்திலாவது பூமியிலாவது, அல்லது பூமியின் கீழாவது ஒருவனும் புஸ்தகத்தை எடுக்கவும், அதை திறக்கவும், முத்திரைகளை உடைக்கவும் கூடாதிருந்தது.'' என்றான். பிறகு அவன், 'உலகத் தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக் குட்டி வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து (ஆங்கில வேதத்தில் ''எடுத்து' என்றிருக்கிறது - தமிழாக்கியோன்) முத்திரைகளைத் திறந்து, புஸ்தகத்தை உடைத்து, ஜனங்களுக்கு அதைத் திறந்தார்.'' என்று கண்டான். ஆகவே அவர்தாமே இன்றிரவு வந்து அவ்வாறே செய்வாராக. 17இங்கே இயேசுவானவர் தாமே , தம்முடைய சீஷர்கள் சாட்சிகளாக செல்லும் முன்னர் பரிசுத்த ஆவியாகிய தகுதிக்காக அவர்களை உறுதி செய்து நியமித்துக் கொண்டிருந்தார். ஆகவே இன்றிரவு ஒரு சாட்சி'' என்பதே என்னுடைய பொருள். இப்பொழுது நீதிமன்றங்களில், ஒரு சாட்சி சொல்பவனுக்கு ஏதாவதொன்று தெரிந்திருக்க வேண்டும். யாராவது ஒருவர் “ உள்ளே வந்து ஒரு சாட்சியாக ஆக முடியாது. ஏதாவதொன்று தெரிந்து வைத்திருக்கின்ற யாராவது ஒருவராக அது இருக்க வேண்டும். ஆகவே நாம் கர்த்தருக்கென்று சாட்சிகொடுக்கையில் அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். ஏதாவதொன்றை தெரிந்து வைத்திருக்கின்ற யாராவது ஒருவராக இருத்தல்வேண்டும். ஆதலால் இயேசு, அவர்கள் தம்முடைய சாட்சிகளாக ஆகும் முன்னர், ''உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் அவர்கள் காத்திருக்கவேண்டியதாயிருந்தது,'' என்று சிந்தித்தார். இதைக் கூறினார். பிறகு அவர்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும் சாட்சிகளாய் இருப்பார்கள். 18நீதிமன்றங்களில் இரண்டு விதமான சாட்சிகள் கண்டது அல்லது கேட்டது அங்கே நிற்கின்றன. இப்பொழுது, நீங்கள் அந்த ஒரு அறையில் உட்கார்ந்துக் கொண்டு கண்ணாடியின் மூலமாக ஒரு விபத்தைக் கண்டால், உங்களுடைய சாட்சி , உங்களுடைய வார்த்தை சரியாக இருக்காது, ஏனெனில் நீங்கள் ஒரு கண்ணாடியின் மூலமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சாட்சியாக ஆவதற்கு முன்னர், நீங்கள் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உண்மையாகவே அறிந்தவர்களாய் இருக்க வேண்டும் என்றால் அங்கே சரியாக அருகாமையில் இருந்தவர்களாய் இருத்தல் வேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒரு முக்கியமான, தீவிரமான வழக்கில் நீங்கள் ஒரு சாட்சியாக ஆகும் முன்னர், நீ அதைக் கேட்டிருக்க வேண்டும் அல்லது நீ அதை பார்த்திருக்க வேண்டும். நீங்கள், ''செல்வி இன்னார் - இன்னார் என்னிடம் கூறினார்கள், அல்லது திரு. இன்னார் - இன்னார் அல்லது சங்கை இன்னார் - இன்னார் என்னிடம் கூறினார்“ என்று கூறமுடியாது. அவர் தான் சாட்சி ஆவார். ஆனால் நீங்கள் அல்ல. ஆதலால் எந்த ஒரு மனிதனும் பரிசுத்த ஆவியினாலன்றி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சரியாக சாட்சி அளிக்க முடியாது. நீங்கள் தாமே, அங்கே இருந்தவர்களாய், அதைக் குறித்து ஏதோ ஒன்றை அறிந்தவர்களாய், நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பதை அறிந்தவர்களாய், ஒரு தனிப்பட்ட சாட்சியாய் நீங்கள் இருக்கவேண்டும். 19மனிதர் தாங்களாக அப்படியே இருக்கும் நாளை நாம் காண தேவன் நமக்கு உதவி செய்யட்டும். உங்களுக்கு தெரியும், நான்...இதை எல்லா மரியாதைகளோடும் நான் இப்பொழுது கூறுகிறேன். கள்ளக் கடத்தல் குற்றங்களால் நிறைந்திருக்கின்ற நம்முடைய பட்டணம் அல்ல, அது நம்மை வேதனைக்குட்படுத்துகிறதில்லை. ஜனங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் அதைப் போன்று ஜீவிப்பதில்லை. இதுவே என்றுமில்லாத அளவிற்கு நம்மை வேதனைக்குள்ளாக்குகின்றது. அதுதான் காரியம், பாருங்கள். அவர்கள் சரியான சாட்சி அல்ல. அவர்கள் அனுபவத்தை பெற்றிராதவரைக்கும் சாட்சியளிக்க முடியாது. ஆகவே அவர்கள் அந்த அனுபவத்தைப் பெறும் போது அப்பொழுது அவர்கள் தானாகவே ஒரு சாட்சியாக ஆகின்றனர், ஏனெனில் அவர்கள் மறுபடியும் பிறக்கின்றனர். ''உலகத்தின் எல்லா காரியங்களும், பழையவைகள் யாவும் ஒழிந்து போயின், எல்லாம் புதிதாயின. பிறகு நீங்கள் இயேசுவிற்கு ஒரு சாட்சியாக ஆவீர்கள். 20இந்த அப்போஸ்தலர்கள் வெளியே சென்று ஒரு சரியான சாட்சியாக இருக்க வேண்டுமென்றால், தாங்கள் சாட்சியிடுகின்ற தான காரியத்தைக் குறித்த அனுபவத்தை அவர்கள் உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார். இன்றைக்கு இருக்கின்ற ஒவ்வொரு வேத பள்ளிகளும் அதே காரியத்தை செய்தால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதே காரியத்தை செய்வானேயானால் நலமாயிருக்கும் அல்லவா? சபைக்கு வந்து, ''இப்பொழுது இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நான் பெறும் வரைக்கும் சரியாக இங்கே நான் இருப்பேன், பிறகு சாட்சியாக வெளியே நான் செல்வேன்'' என்று கூறுவார்களானால் பாருங்கள்? காரியங்கள் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் அப்படித்தானே நினைக்கிறீர்கள்? சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி]. அந்த உறுதியில்லாத , சிதறிப்போயிருக்கின்ற சாட்சிகளை நாம் கொண்டிருக்க மாட்டோம். ஜனங்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சாட்சி கொடுத்து, பிறகு வெளியே சென்று வேறு விதமான ஜீவியம் செய்கின்றனர். ஒரு அவிசுவாசி வந்து அதைப் பார்த்தால், நல்லது, அங்கே பார்! அவ்விதமாகத் தான் அவர்கள்...' என்பான். ஆகவே பிசாசும் கூட எப்பொழுதும் அதையே சுட்டிக்காட்டுவான். நீங்கள் அதன்மேல் சாய்ந்துவிடக் கூடும். அவன் ஒரு அலுவலை நன்றாகச் செய்யும் ஒருவன் ஆவான். அவனுடைய திறமையையும் அவனுடைய கிரியையின் அதிகார எல்லையையும் நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள், ஏனெனில் அதைக் குறித்த எல்லாவற்றையும் அவன் அறிந்திருக்கிறான். 21இப்பொழுது, நீங்கள் ஒரு சாட்சியாக ஆகும் முன்னர், நான் கூறின பிரகாரமாகவே, நீங்கள் ஏதாவதொன்றை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உண்மையாகவே ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டிலே தேவன் ஒரு சாட்சியை கொண்டிருந்தார். சாட்சிகளில் அவருடைய சாட்சிகளில் முதலாவதாக நோவா இருந்தான். நோவா ஒரு சாட்சியாக இருந்தான். ஏனெனில் வெள்ளம் வரப்போகிறதென்றும், ஆகவே அவன் ஒரு பேழையை கட்டவேண்டும் என்றும் அவனிடம் எச்சரித்துக் கூறின் தேவனுடைய சத்தத்தை அவன் கேட்டிருந்தான். ஆகவே இந்த பேழையைக் கட்ட உடனே அவன் ஆயத்தப்படுத்த வேண்டியதாயிருந்தது, ஜனங்களைக் காப்பாற்ற ஒரு இடத்தை அவன் ஆயத்தம் செய்ய வேண்டியதாயிருந்தது. வரக்கூடியவர்கள் எல்லாரும் உள்ளே வரலாம். ஆகவே அவன் தேவனுடைய சாட்சியாக இருந்தான். இப்பொழுது, அவனுக்கு தெரிந்திருந்த ஒரே காரியம், மழை பெய்யப்போகின்றது என்று தேவன் அவனிடம் கூறிய காரியமே. பூமியின் மீது மழையே பெய்யாதிருந்தது. ஆனால் மழை பெய்யும் என்று தேவன் கூறினார். ஆதலால் மழை பெய்யப்போகின்றது என்று தேவன் கூறியிருப்பாரானால், அப்படியானால், அதென்னவென்றால் மழை பெய்யப் போகின்றது. ஆகவே தேவனுடைய வார்த்தைக்கு அவன் சாட்சியாக இருந்தான். ஆகவே அவன் அழைக்கப்பட்டான். அவன் வெளியே சென்று பேழையை செய்து, மழைக்காக, மழை கீழே விழும் முன்னர் அவன் காரியங்களைத் தயார் செய்தான். பிறகு, தேவனுடைய மற்றுமொரு சாட்சி இருக்கின்றது. 22ஒரு சமயம் குறிப்பிட்ட ஜனங்கள் இருந்தனர், யூதர்கள், யூதா கோத்திரத்திலிருந்து வந்தவர்கள், அதிலிருந்து அவர்களுடைய பெயர் விளங்கினது. தேவனுடைய நியமனங்களின்படியே நடவாதவர்களாயும், அவருடைய கட்டளைகளை கைகொள்ளாதவர்களாயும் அவர்கள் இருந்தபடியால், அவர்களைச் சிறைபிடித்து பாபிலோன் தேசத்திற்குள் கொண்டு செல்வதற்காக தேவன் நேபுகாத் நேச்சார் அரசனை உள்ளே வரும்படி அழைத்தார். அவர்கள் எப்படி தங்கள் கின்னரங்களை அலரிச் செடிகளின் மேல் தூக்கி வைத்தனர் என்றும், சீயோனின் பாடல்களை அவர்களால் பாட முடியாதிருந்தது என்பதைக் குறித்து பிரசித்திப் பெற்ற பழைய கதையை நம்மில் அநேகர் நினைவில் கொண்டுள்ளோம். அவர்களுடைய ஜெயமெல்லாம் இழக்கப்பட்டு போயிற்று, அதை அவர்களிடம்மிருந்து தேவன் எடுத்துக்கொள்ள விரும்பினார் என்பதல்ல; ஆனால் அவர்களுடைய பாவமே அவர்களை தேவனிடமிருந்து வேறு பிரித்துவிட்டது. அதன் காரணமாகத்தான், இன்றிரவு அநேக கிறிஸ்தவர்கள் வெற்றியைப் பெறாமல் உள்ளனர், ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் அவர்களை ஆசீர்வாதத்தினின்று வேறு பிரித்து விட்டது. வெளியே வனாந்திரத்தில் தனிமையில் அறுப்புண்டு போகச் செய்து விட்டது. ஆகவே நம்முடைய இருதயங்கள் அலறி செடியின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் சபையின் பாடல்களை நம்மால் கேட்டு மகிழ முடியாமல் இருக்கின்றது. 23சில காலங்களுக்கு முன்பாக நாங்கள் இங்கே வந்து கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. மணியானது அடித்துக் கொண்டிருக்கும்போது, பியானோ கருவியில் சிலுவை அண்டையில் என்னும் பாடலை அவர்கள் வாசித்துக் கொண்டிருப்பர், அப்பொழுது உள்ளே வருவார்கள். சபையில் ஒரு உலர்ந்த கண் இருப்பது அரிதாயிருக்கும், எல்லோரும் அழுது கொண்டிருப்பர், மெதுவாக, மிருதுவாக. அந்த பழமை - நாகரீக வழி எனக்கும் பிடிக்கும்; மிருதுவாக இனிமையாக, பரிசுத்த ஆவியின் வல்லமை வெளிவருதல். நாம் ஏதாவதொரு வகையில் முன்னேற முதலாவதாக நாம் உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பானையானது மறுபடியும் வனையப்படும்படியாக அதைத் துண்டு துண்டாக்க குயவன் செய்வதைப்போல, அந்தத் தீர்க்கதரிசியும் அந்தக் குயவனின் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, உடைக்கப்படுதல் இல்லை என்றால் மறுபடியுமாக வனையப்பட முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். முதலாவதாக நீங்கள் உடைக்கப்பட வேண்டும். ஆகவே சகோதரன் ரைட் அந்த நிலத்தைக் குறித்தென்ன, நீங்கள் ஒரு செடியை கொண்டிருக்க போகிறீர்கள் என்றால் முதலாவதாக அந்த நிலத்தை நீங்கள் உடைக்க வேண்டும், தோண்ட வேண்டும், அதை சுக்குநூறாக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் விதையை விதைக்கின்றீர்கள், அது முளைக்கத் துவங்கும். அது உடைக்கப்பட்டிருக்கையில் நீங்கள் விதைக்கப்போகும் விதையைப் பொறுத்து இருக்கின்றது. ஆதலால் செடிகள்... நிலமானது உடைத்து உழைக்கப்பட்ட பிறகு, விதையை நடுவதற்காக நேரம் அதுவேயாகும். 24பிறகு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து அகன்று சென்று, பாபிலோனுக்குள் சென்ற இந்த சகோதரர், சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்டனர், ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் அவர்களை தேவனிடமிருந்து வேறு பிரித்து விட்டது. சபை அல்லது ஒரு தனிப்பட்ட ஒரு நபர் உலகத்தோடு விளையாடிக் கொண்டோ , சரசமாடிக் கொண்டோ இருப்பார் . களானால், தேவனிடமிருந்து அகன்று செல்லுதல், சத்தியத்தி லிருந்து விலகிச்செல்லுதல், போன்ற அதே அனுபவத்தைத்தான் நீங்கள் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று பழமை நாகரீகம் கொண்டவனாய் இன்றிரவு நான் நம்புகிறேன். ஆகவே அதை நான் நம்புகிறேன். அது உண்மை என்பதை நான் - நான் அறிவேன். இப்பொழுது, இருபது வருடங்களாக நான் ஊழியத்தில் இருந்து வருகிறேன், ஆகவே பல்வேறு வித்தியாசப்பட்ட காரியங்களை, ரகங்களை உலக முழுவதிலும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் நண்பர்களே, நான் உங்களுக்கு கூறுகிறேன். நீங்கள் இகழ்ச்சியாக, தாழ்வானவர்களாக கருதப்படுவீர்கள். ஆனால் ஒரு பழமை நாகரீகமான உள்ளம் உடைகின்ற ஒரு கூட்டமே எனக்கு பிடிக்கும். 25நான் இங்கே பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், யாரோ ஒருவர் என்னிடம் வந்து, ''அந்த ஸ்திரீ ... பில்லி, அந்த ஸ்திரீ அங்கே பின்னால் உட்கார்ந்து விசும்பிக் கொண்டும், அழுது கொண்டும், ஆமென் என்று கூக்குரலிட்டுக்கொண்டும் இருக்கையில், உம்மால் எப்படி பிரசங்கங்கள் செய்ய முடி கின்றது?'' என்று கூறினார். நான் ஒரு வேளை அதன் காரணமாகத் தான் பிரசங்கம் செய்திருக்க கூடும். சரி. ஆம்'' என்றேன். நான் கூறினேன் ''அவள்...'' ''நல்லது, யாராவது அதைப்போன்று அழுது கொண்டிருக்கும் போது, நான், நான் பேச முற்படுவேனானால், அது ஏறக்குறைய என்னை கொன்று விடும்'' என்றார். நான் சகோதரனே, அது என்னை பாதிக்கவில்லை. அது என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தது'' என்று கூறினேன். அவர், ''ஒரு மோசமான பாவியாக அல்லது ஏதோ ஒன்றாக அவள் இருந்தாளா?“ என்றார். நான், “இல்லை, அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு கிறிஸ்தவள் ஆவாள்'' என்று கூறினேன். “ அவள் அழுதுகொண்டிருந்தாளே?'' நான், 'ஆம் வேதம் கூறுகிறது, ''அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான் ; விலையேறப் பெற்ற அரிகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான், சந்தேகமில்லை,'' என்று கூறினேன். ஆமென். அது சரி, 'விதைத்துக் கொண்டே செல்கிறவன்'' பாருங்கள், 'கண்ணீரோடே விதைக்கிறவன் அழுது கொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த விலைமதிக்க முடியாத அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்'' முதலில் காரியங்களை வையுங்கள், உடைத்தல், முழுமையாக செய்தல், பிறகு துதித்துக்கொண்டே திரும்புங்கள். ஆமென், அது சரி. 26இந்த இஸ்ரவேல் பிள்ளைகள் அங்கே, வேறொரு ராஜாவின் கீழ் இருந்தனர். அந்...அவர்களுடைய சொந்த ராஜாவும் அவர்களுடனே கூட கொண்டு செல்லப்பட்டார். கொடிய ராஜாவான நேபுகாத்நேச்சார் ராஜா என்னும் வேறொரு ராஜாவின் கீழ் அவர்கள் வந்தனர். ஆகவே ஒருநாள் அவன் கூறினான். ''எந்த ஜனமும்... அவன் ஒரு மகத்தான சிலையைச் செய்து வெளியே நிலத்திலே நாட்டி, ''தாழ விழுந்து அந்த சிலையைப் பணிந்து கொள்ளாமல் போகின்ற ஒவ்வொரு நபரும், எரிகின்ற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்பட்டு சுட்டெரிக்கப்படவேண்டும் என்று கூறினான். இந்தப் பையன்களும், ஒவ்வொருவரும் சுட்டெரிக்கப் படவேண்டும் என்ற எப்பேற்பட்ட ஒரு கட்டளை. ஜெபத்திற்கு பதிலை அறிந்திருந்த, சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்னும் பேர் கொண்ட மூன்று பேர் அங்கே இருந்தனர். அவர்கள் அந்த சிலைக்கு தங்கள் முதுகுகளைத் திருப்பினர். ஆகவே அவர்கள், “ஓ, ராஜாவே, இது உமக்கு தெரிந்திருக்கட்டும்...'' என்றனர். இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தம்முடைய சாட்சிகள் கண்டிப்பானவர்களாய் இருக்க தேவன் விரும்புகிறார்; இன்றைக்கு சாட்சியாக இருந்துவிட்டு, நாளைக்கு மெலிவான , சாரமற்றவர்களாய், குழைபவர்களாய் அல்ல . 27இன்றைக்கு ஒரு அடக்க ஆராதனையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், மிகவும் ஆணித்தரமாக கடிந்து கொண்டு பேசினேன்; யாரோ ஒருவர் என்னிடம், ''ஜனங்களில் அநேகர் பாவிகள், கிறிஸ்துவை ஏற்று கொண்டிராதவர்கள் என்று நான் நினைக்கிறேன்'' என்று கேட்டார். ஒருவேளை மிகவும் ஆணித் தரமாக பேசி கடிந்து கொண்டு விட்டேனோ என்று நான் எண்ணி ஆகவே நான் அடக்கம் செய்யும் பணியின் மேற்பார்வை யாளரின் காரில் சென்று அமர்ந்த போது, அவர் அருகில் வந்து, என் தோளின் மேல் தட்டிக் கொடுத்து 'பிரசங்கியே, உம்மை நான் பாராட்ட விரும்புகிறேன்“ என்று கூறினார். '' நான், ''அஹ் - ஓ'' என்று எண்ணினேன். அவர், ''அவ்விதமாக அது பிரசங்கிக்கப்பட வேண்டும். குழைந்த, சாரமற்ற மெலிவான மதம் எனக்கு பிடிக்காது“ என்று கூறினார். மனிதனே, உமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று நான் எண்ணினேன். அது சரி. அது சரி, நீ சரியாக எங்கே வைக்கின்றாயோ அதற்கே உரியது அது. அது முற்றிலுமாக சரி. 28இந்த பிள்ளைகளாகிய சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ தேவனுடைய சாட்சிகள் ஆவர். தேவன் எப்பொழுதுமே ஒரு சாட்சியை கொண்டிராமல் இருந்தது கிடையாது. அவர் எப்பொழுதும்.... இப்பொழுது இங்கே நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எப்பொழுதுமே , எந்த காலத்திலும், பூமியில் ஒரு சாட்சியை கொண்டிராதவராக தேவன் இருந்ததே இல்லை. அவர் தம்முடைய கரங்களை மேலே வைத்து அது தான் என்னுடைய சாட்சி' என்னும்படியாக எப்பொழுதுமே ஒரு மனிதனையாகிலும் உடையவராக அவர் இருப்பார். தேசத்தில் ஆபிரகாம் இருந்தான்; ஆகையால் தேவன் ஒரு சாட்சியை உடையவராக இருந்தார். எங்கேயாவது யாரோ ஒருவர் தேவனுக்காக சாட்சி கொடுக்கப் போகிறார்கள். இப்பொழுது, சிறிது நேரம் கழித்து, இந்த நாளிற்குரிய உண்மையான சாட்சியானது என்ன விதமானது என்று நாம் காண விரும்புகிறோம். அது சரி. கவனியுங்கள். இந்த மனிதர், அங்கே சென்றிருந்தபோது, ராஜாவினுடைய மாமிசங்களை அவர்கள் மறுத்தனர், அவனுடைய திராட்சரசத்தைத் குடிக்க மறுத்தனர். மேலும் அவனுடைய சிலைக்கு முன்பாக தாழ்ந்து விழ மறுத்து விட்டனர். அவர்கள் தேவனுடைய மெய்யான, உண்மையான சாட்சிகளாய் இருந்தனர். 29பிறகு சில சமயங்களில் ஒரு சாட்சி தண்டனையைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். சில சமயங்களில் நீ தேவனுக்காக சாட்சி கொடுப்பாயானால், நீ சிறிது துன்பப்பட நேரிடும். நீ வேதத்தைப் படித்துக்கொண்டு அதோடு இருக்குமட்டும் நீ வீட்டில் தங்க முடியாது என்று உன் தாயார் கூறினது உனக்கு நினைவிருக்கிறதா? அல்லது உன் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த வர்கள், அல்லது பள்ளியில் இருக்கின்ற பிள்ளைகள் “'நீ ஒரு அதிதீவிரமூடபக்தி உடையவன்'' அல்லது ஏதோ ஒன்றை , நீ ஒரு உண்மையான சாட்சியாக இருப்பதால் தானே அவர்கள் கூறினர்? வேலை ஸ்தலத்தில், (ஞாபகம் கொள்ளுங்கள்). நீ உண்மையான சாட்சியாய் இருந்ததினாலல்லவா அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்தனர். பாருங்கள்? நீ தெருக்களில் சாட்சி கொடுத்தபோது அவர்கள் உன்னைக் கேலியாகப் பேசவில்லையா? ஆனால் ஒரு உண்மையான, விசுவாசமான சாட்சியினுடைய மெய்யான அடை யாளம் அதுவேயாகும். தேவனுக்கு சாட்சியாளர்கள் தேவையாயுள்ளது. - இப்பொழுது சில ஜனங்கள், ''நான் சபையில் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறுவர். அது அருமையானதுதான். ஆனால், சகோதரனே, அங்கே வெளியே புதர் வேலிகளில், நெடுஞ்சாலைகளில், மது அருந்தும் இடங்களில், தெருவில், எங்கு மிக அவசியமாக தேவையாயிருக்கின்றதோ, அந்த இருளான இடங்களில் உன்னுடைய வெளிச்சம் பிரகாசிக்கட்டும். நீங்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் உங்களுடைய வெளிச்சமானது சாட்சியாக பிரகாசிப்பதாக. ஆமென். கவனியுங்கள், பிறகு அந்த பயங்கரமான சோதனை வருகின்றது. ஆகவே தேவனுக்காக சாட்சி கொடுக்கும் ஒவ்வொரு மனிதனும் பயங்கரமான சோதனைகளினூடாகச் செல்ல வேண்டியவனாக இருக்கிறான். தேவன் தம்முடைய ஜனங்களை நடத்துவதும் மிகவும் வினோதமாக இருக்கின்றதல்லவா? மிகவும் வினோதமானது. 30இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டவுடன் பிசாசினால் சோதிக்கும்படியாக வனாந்திரத்திற்குச் சென்றார். விருத்தசேதனம் பண்ணப்பட்டு, இரத்தத்தின் கீழாக ஒரு ஒளியின் வடிவில் பரிசுத்த ஆவியினாலே வழி நடத்தப்பட்ட அவர்கள், இஸ்ரவேலர் வெளியே வந்தபோது, நேராக சிவந்த சமுத்திரத்தினண்டையிலே வந்தனர். ஆகவே அங்கே, இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டனர், ஒரு பக்கம் மலைகள், மறுபக்கம் பாலைவனம், பார்வோனின் சேனை வந்து கொண்டிருந்தது. சிவந்த சமுத்திரம் அவர்களின் பாதையை தடுத்திருந்தது. நேராக அந்த இடத்திற்கு தேவன் அவர்களை வழி நடத்தினார். ஏன்? மகிமையைப் பெறுவதற்காக. அப்பொழுது மோசே ஜெபித்தான்; ஆகவே தன் கோலை முன் நோக்கி பிடித்தவாறே சிவந்த சமுத்திரத்தை நோக்கிச் செல்லுமாறு தேவன் அவனிடம் கூறினார். ஆகவே அவன் நடந்து சென்றபோது சிவந்த சமுத்திரம் குறுக்காக ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு விலகிச் சென்றது, என்ன? தேவனுடைய பாதை அதினூடாக வழி நடத்தினது. பிறகு அதை விட்டு கடந்து வந்த உடனே, சீன் வனாந்திரத்திற்குள் அவர்கள் சென்றனர். வினோதமானது. அவர்கள் தேவனுக்கெதிராக முறுமுறுத்த போது, தேவனுடைய பாதையானது நேராக அந்த பெரிய சோதனைக்குள் வழி நடத்திச் சென்றது. அங்கிருந்து அவர்கள், ஒரு முறுமுறுப்பிலிருந்து வேறொரு முறு முறுப்பிற்குள், ஒரு சோதனையிலிருந்து மற்றொரு சோதனைக்குள் சென்றனர். அந்த பழைய பாடல் கூறுவது போல, சிலர் தண்ணீர்கள் மூலமாக, சிலர் வெள்ளத்தின் மூலமாக, சிலர் கொடிய சோதனைகளின் மூலமாக, ஆனால் எல்லாம் அந்த இரத்தத்தின் மூலமாக, அதுதான் தேவன் தம்முடைய சாட்சிகளை வழி நடத்தும் விதம் ஆகும். 31இப்பொழுது, அக்கினியின் பரீட்சை, சோதனையின் சமயம் வந்தபோது, சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத் நேகோ, ''எரிகின்ற அக்கினிச் சூளையிலிருந்து எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் விடுவிக்காமாற்போனாலும் நாங்கள் தாழவிழுந்து பணிந்து கொள்ளப் போவதில்லை'' என்று கூறினர். ''உம்முடைய சாட்சிக்கு நாங்கள் தலை தாழ்த்தப் போகிறோம்'' அது எனக்கு பிடிக்கும். அந்த பழைய வீரம் மன உறுதி எனக்கு பிடிக்கும். அந்த வயதான பட்டி ராபின்சன் (Buddy Robinson) கர்த்தாவே இரம்பத்தால் அறுக்கப்பட்ட பெரிய மரக்கட்டையைப் போன்ற முதுகெலும்பை எனக்குத் தாரும்“ என்று கூறினது போல். ஒரு சாட்சி அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் திடமனதுள்ளவர்களாய், மன உறுதிமிக்க வர்களாய் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். 32அவர் யோசுவாவிடம், அவன் கடப்பதற்கு முன்னர் 'நீ திடமானதாயிரு, ஏனெனில் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்“ என்று கூறினார். ''நல்லது யோசுவாவிடம் கூறினது போல என்னிடம் தேவன் அவ்வாறு கூறுவாரானால், எனக்கு சிறிது மன உறுதி இருக்கும்'' என்று நீங்கள் கூறலாம். அவர் ஒவ்வொரு விசுவாசிக்கும் அதே காரியத்தைத்தான் கூறியுள்ளார், ''உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட எப்பொழுதும் இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவது மில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை.'' திடமனதாயிருங்கள் அப்படியானால் நாம் சென்று வாக்குத்தத்தை எடுத்துக்கொள்வோம். தேவன் நமக்கு அந்த வாக்குத்தத்தத்தை கொடுத்தார். நாம் உண்மையான சாட்சியாய் இருப்போம். 33ஆதலால் அந்த அக்கினிச் சூளையை முன்பு இருந்ததை விட ஏழு மடங்கு அதிகமாக அவர்கள் சூடாக்கினார்கள். பிசாசு அந்த விதமாகத்தான் செய்வான். ஆகவே, சகோதரனே, அவன் எதையுமே அரைகுறையாக செய்யமாட்டான். அவன் வைத்திருக்கின்ற எல்லாவற்றையும் உனக்குள்ளாக தள்ளுவான். ஆனால் தேவனுக்கு நன்றி, திருப்பி தள்ளத்தக்கதாக தேவன் சிலவற்றை கொண்டிருக்கிறார், தாமாகவே அதைச் செய்கிறார். அது சரியே. சரி. அவரை நோக்கிப்பாருங்கள். ஆதலால் அவன் கூறினான்.... இப்பொழுது கவனியுங்கள். அந்த பெரிய அக்கினிச்சூளை புகை அருகே நேபுகாத்நேச்சார் ராஜா உட்கார்ந்திருப்பதை என்னால் காண முடிகின்றது. வானங்கள் சிவப்பாக இருந்தன. 34அந்த இரவு முழுவதும் ஜெப கூட்டம் நடந்து கொண்டிருந்தது என்று நான் கற்பனை செய்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் ஒரு சோதனையை சந்திக்கும்போது... அது இங்கே உள்ளது. இதோ இன்றைக்கு சபையில் இருக்கும் பிரச்சனை அதுவேயாகும். ஜெபத்திலே கர்த்தரிடத்தில் அதைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் சொந்த புலன்களின் மேல், திறமையின் மேல் சார்ந்து கொள்கிறீர்கள். அது சரி. இன்று நாம் யாரோ ஒருவரை எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்ப ஆரம்பிக்கிறோம். நல்லது நீங்கள், ''நாம் உட்கார்ந்து சிறிது ஆலோசனை செய்வதற்காக ஒன்று கூடி“நாம் இதைச் செய்ய வேண்டும், அல்லது இங்கே செல்ல வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும்'' என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதாகமத்தில், அவர்கள் அப்போஸ்தலர்களை வெளியே அனுப்புவதற்கு முந்தைய நாட்களில் அவர்கள் ஒன்று கூடி உபவாசித்து ஜெபித்தனர். ஆகவே பரிசுத்த ஆவி யானவர் “பவுலையும் பர்னபாவையும் எனக்காக அவர்களை பிரித்து விடுங்கள்” என்று கூறினார். அந்த பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கவனியுங்கள், ஒரு மனிதனுடைய கருத்தல்ல ; ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதல், வழிகாட்டல். ஆமென். கவனியுங்கள்.. இப்பொழுது, முழு இரவும், ஜெபம். தாங்கள் எப்படிப் பட்டவர்களாய் இருக்கின்றனர் என்பதை அவர்கள் காண்பிக்க வேண்டியதாய் இருந்தது. ஆகவே, சகோதரனே, கிறிஸ்தவன் என்று பகிரங்கமாக கூறிக்கொள்கின்ற ஒவ்வொரு மனிதனும், என்றாவது ஒரு நாளில் நீ எப்படிப்பட்ட ஒருவன் என்பதைக் காண்பித்தாக வேண்டும். பிசாசு உன்னை பலப்பரீட்சைக்கு அழைப்பான். 35உங்களில் அநேகர் அறிந்திருக்கின்ற டாமி ஆஸ்பர்ன், நான் வாசலில், முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் வந்து “சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த கூட்டத்தில் இருந்தேன். அந்த பிசாசு பிடித்த பைத்தியக்காரன் உங்களுடைய காலில் விழுந்ததை நான் கண்டேன்'' என்றார், மேலும், ”நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கூறினார். நான், 'இப்பொழுது, டாமி, உங்களால் நிரூபிக்க முடியாத, செய்ய இயலாத காரியங்கள் எதையும் பகிரங்கமாகக் கூறாதீர்கள். பிசாசு அதைக் குறித்து உங்களை பலப்பரீட்சைக்கு அழைப்பான். ஆம், அவன் செய்வான், சரியாக இப்பொழுதே அவன் செய்வான். அப்படியானால் உங்களால் அதை நிரூபிக்க, செய்யமுடியவில்லை யெனில், என்ன ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு நிந்தையாக இருக்கும். ஆதலால் நீங்கள் உங்கள் காரியத்தை அறிவிக்கும் முன்னர், நீங்கள் சரியாக உள்ளீர்களா என்பதை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினேன். 36ஆகவே, கிறிஸ்தவனே, அது உண்மை . தேவன் உன்னை உலகத்தின் காரியங்களிலிருந்து வேறு பிரித்து உன்னை ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்கியிருக்கிறார் என்பதை உன்னுடைய இருதயத்தில் நிச்சயத்துக்கொள், பிறகு நீ ஒரு கிறிஸ்தவன் என்று போய் ஜனங்களிடத்தில் கூறு. அது நடக்கும் வரையிலும், நீ பீடத்தண்டையிலேயே தரித்து நீ மரித்துப் போயிருக்கின்றாய் என்கின்ற அளவிற்கு இருந்து மரித்துப் போ. அது சரி. நீ மரித்துப் போயிருக்கின்றாய் என்ற அளவிற்கு மரித்துப்போ . உன்னாலே... நல்லது, அது சரி, மரித்துப்போயிருத்தல்! உங்களுக்குத் தெரியுமா, இன்றைக்கு நாம் அநேக உயிருள்ள ஜனங்களைப் புதைத்துவிடுகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஜனங்கள் மரித்த பிறகு தானே நீங்கள் புதைக்கின்றீர்கள். அது சரி தானே? ஆம், ஐயா. கவனி, சகோதரனே, ஒரு மரித்த மனிதன் உன்னுடன் விவாதம் செய்ய மாட்டான். நீ விரும்பும் எதை வேண்டுமானாலும் அவனிடம் கூறலாம், எல்லாவிதமான பெயர்களைக் கொண்டும் அழைக்கலாம், அவன் ஒரு வார்த்தையையும் கூறமாட்டான். ஏன்? அவன் மரித்துப்போயிருக்கிறான். ஆகவே கிறிஸ்துவுக்குள் மரித்திருக்கிற ஒரு மனிதனுக்கு, நீங்கள் மதுபானத்தை, சாராயத்தை கொடுக்கலாம், இதை, அதை மற்றும் வேறொன்றை நீங்கள் அவனுக்கு அளிக்கலாம், ஆனால் அவன் மரித்துப் போயிருக்கிறான். ஆகவே அவன் தேவனின் மூலமாக கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கிறான். ஆமென். அதுதான். இப்பொழுது, அப்படியானால் அந்த காரியங்களை அவனால் செய்ய முடியாது, ஏனெனில் அவன் - அவன் அதைச் செய்ய முடியாது. அது அவனுடைய சுபாவத்திற்கு எதிரானது. அவன் ஒரு புது சிருஷ்டியாகின்றான். 37நீங்கள் ஒரு பன்றியை எடுத்து அதைத் தேய்த்து குளிக்க வைத்து அதனுடைய கால் நகங்களை சுத்தம் செய்து, அதன் உதடுகளுக்கு சாயம் பூசி நீங்கள் விரும்பும் நைலான் உடுப்புகளை அதற்கு அணிவித்து, அதை கட்டவிழ்த்து விடும், அது நேராக ஒரு குட்டையிலிருக்கின்ற சேற்றிற்குச் சென்று புரளும். அழுக்கை தேய்த்து அகற்றினாலும் அதினால் ஒரு பயனும் இல்லை. அது இன்னுமாக பன்றியின் சுபாவத்தையே கொண்டிருக்கிறது ... ஆகவே பிறகு நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து, அதை ஒரு மண் குழிக்குள் போடுவீர்களானால், நீங்கள் அதை வெளியே எடுக்கும் வரை அது சத்தமிட்டுக் கொண்டேயிருக்கும். ஏன்? அதற்கு ஆட்டுக்குட்டியின் சுபாவமே இருக்கின்றது. இப்பொழுது, அந்த பன்றியை சேற்றிலிருந்து வெளியே வைத்திருக்க வேண்டுமென்றால் அதனுடைய சுபாவத்தை மாற்ற வேண்டும். அது சரி. ஒரு கிறிஸ்தவனாக ஆக்கக்கூடிய ஒரே வழி அதுவேயாகும். ஒரு பாவியிலிருந்து ஒரு பரிசுத்தவானாக அவனுடைய சுபாவமானது மாற்றப்படவேண்டும். பாருங்கள்? ஆகவே அதை சரியாக்க ஒரேயொரு பரிகாரம்தான் இருக்கின்றது, அது பரிசுத்த ஆவியே. பிறகு நீ ஒரு சாட்சியாக ஆகின்றாய். ஆமென். 38இப்பொழுது, கவனியுங்கள். இதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த ஜனங்கள் சுட்டெரிக்கப்பட வேண்டுமென்று நேபுகாத்நேச்சார் பிரகடனம் பண்ணினான். ஆகவே அந்தக் காலையில் அவர்கள், இவர் களுடைய கைகளைக் கட்டினார்கள். ஒரு பலகையில் காரியங்கள் எழுதப்பட்டு அந்த பெரிய அக்கினிச் சூளை வரை சாலையில் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் அந்த அக்கினிச் சூளைக்குள் செல்லத்தக்கதாக சென்றனர். ஆகவே அவர்கள் தங்கள் மரண பயணத்தை ஆரம்பித்தனர். அவன் இப்பொழுது கவனியுங்கள், உங்களுக்கு வாய்ப்புகள் இப்பொழுதும் உள்ளன. நீங்கள் பணிந்து கொள்ள விரும்பினால், சரி“என்று கூறினான். அவர்கள், எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவரா யிருக்கிறார், நாங்கள் பின்வாங்க மாட்டோம்'' என்று கூறினர். கடைசி வரைக்கும் உண்மையான, உத்தமமான சாட்சிகளாக அவர்கள் இருந்தனர். அவர்கள் அந்தப் பாதையில் நடந்து மேலே செல்லத் துவங்கினர். போர் வீரர்கள் அவர்களை கூட்டிச்சென்றனர். அந்த போர் வீரர்களை மூர்ச்சையடையச் செய்யும் அளவிற்கு அந்த அக்கினிச் சூளை மிகவுமாக சூடாக்கப்பட்டிருந்தது. ஆகவே அந்த எரிகின்ற பயங்கரமான அக்கினிச் சூளைக்குள்ளாக அவர்களைப் போட அவன் தயாரான போது, சாத்ராக் “ஏய், நிச்சயமாக ஜெபித்து விட்டாயா?'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. ''ஆம், இப்பொழுது எல்லாம் சரியாக இருக்கின்றது என்று நான் விசுவாசிக்கிறேன்” அது சரி. ஆகவே அப்பொழுது அவர்களைக் கொண்டு வந்த போர் வீரர்களும் கூட கொல்லப்பட்டனர். பிறகு அவர்களை உள்ளே தள்ளினர். அவர்கள் சில படிகளுக்கு அப்பால் இருந்து இவர்களை அந்த எரிகின்ற அக்கினிச் சூளைக்குள் தள்ளியிருக்கக்கூடும். 39இப்பொழுது, பூமியில் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருந்த பொழுதில், பரலோகத்திலும் ஏதோ ஒன்று நடந்து கொண் டிருந்தது. இங்கே ஒரு விசுவாசி தன்னுடைய மரணத்திற்கு செல்லும் ஒரு கோரமான காட்சியை நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றிரவு பரலோகத்தை நோக்கி நமது காமிராவை நாம் திருப்புவோம். ஆகவே இங்கே கீழே காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கையில், மேலேயும் ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அங்கே தேவன். அந்த தேவனுடைய குமாரன் வலது பாரிசத்தில் உட்கார்ந்துக்கொண்டு கீழே நோக்கி பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகின்றது. ஒரு தூதன், தன்னுடைய மகத்தான பட்டயத்தை கையில் வைத்திருந்தவனாய் வந்து, ''கர்த்தாவே, நான் காபிரியேல், இப்பொழுது, நீர் என்னை சிருஷ்டித்த நாள் முதல் நான் உம்முடைய வலது புறத்தில் இருந்து வருகிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்று நீர் என்னிடம் கூறினதையே நான் செய்திருக்கிறேன். இக்காலை, கீழே இருக்கின்ற அந்த சாட்சிகளை நீர் பார்த்தீரா? அந்த மூன்று சாட்சிகளையும் சுட்டெரிக்கத்தக்கதாக அவர்கள் ஆயத்தம் செய்கின்றனர்'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. ''இரவு முழுவதும் நான் அவர்களைக் கவனித்துக் கொண் டிருந்தேன்'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. ''நான் கீழே செல்ல அனுமதியும், நான் அதை.. காரியத்தையே நான் மாற்றி விடுகின்றேன்“ என்று அவன் கூறினான். அதை அவன் செய்திருக்கக்கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால், அவரோ, ''காபிரியேல், உன்னுடைய பட்டயத்தை அதினுடைய உறையில் போடு. நான் உன்னை அனுப்பமுடியாது“என்று கூறினார். 40பிறகு, அவருடைய இடது புறத்திலிருந்து, இங்கே எட்டி (Worm wood) என்னும் பேர் கொண்ட ஒரு மகத்தான தூதன் , வருவதை நான் காண்கிறேன். தண்ணீரை தன் கட்டுக்குள் அவன் கொண்டிருந்தான். ஆகவே அவன் வந்து அவருக்கு முன்பாக தாழ விழுந்து “கர்த்தாவே கீழே அந்த சாட்சிகளை நீர் பார்த்தீரா? என்ன, ஏனெனில் அவர்கள் தேவனுக்காக சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தபடியால் இந்த காலை வேளையில் அவர்களை சுட்டெரிக்க ஏற்பாடுகள் செய்கின்றனர்” என்றான். “ஆம், அவர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று கூறினார். ''நான் கீழே செல்ல அனுமதியும். நான் பாபிலோனை தண்ணீரால் உலகத்திலிருந்தே எடுத்து விடுகிறேன்“ அதை அவன் செய்திருக்கக்கூடும் என்று, நான் விசுவாசிக்கிறேன். அவன்” 'நீர் எனக்கு திறவு கோல்களைத் தாரும். ஆகவே அந்த நேரத்தில் மனித பரிணா... அல்லது ஜலப்பிரளயத்தின்போது, உமக்காக நான் அந்த முழு உலகத்தை வெள்ளப் பெருக்கினால் நிறைத்து அதை அழித்துப் போட்டேன். இந்த காலை வேளையில் அதே காரியத்தை நான் செய்வேன், நீர் மாத்திரம்..?...'' என்று கூறினான். அதற்கு அவர், 'ஆம், எட்டி, அது சரியே, உன்னால் அதைச் செய்ய முடியும். நீ அதை செய்து முடிப்பாய் என்பதை நான் - நான் அறிவேன், ஆனால் நான் உன்னை அனுப்ப முடியாது.'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. “ஏன், கர்த்தாவே?'' 41இங்கே என்னுடைய இடது பக்கத்திற்கு வந்து நில், ஏனெனில் நான் உன்னை அனுப்ப முடியாது. நானே செல்லப் போகிறேன். இரவு முழுவதும் நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சாட்சிகளை நான் கவனிக்கிறேன். அதை நடப்பிக்கச் செய்ய, என்னுடைய வார்த்தையையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என்னால் அனுப்ப இயலாது. ஏனெனில் “நானே செல்கிறேன்'' அந்த எரிகின்ற அக்கினிச் சூளைக்குள் செல்ல இப்பொழுது இன்னும் ஒரு அடிதான் அவர்களுக்கு இருந்தது. இது விநோதமாக இருக்கின்றதல்லவா? பாதையின் கடைசி அடி வரை நீ வரத்தக்கதாக தேவன் உன்னை விடுகின்றார். அவர் அக்கரை கொள்ளாதவர் போல காணப்படலாம்; அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் உங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். அவர் பாபிலோனிற்குள் உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தை நான் நினைத்துப் பார்க்கின்றேன். நான் அவருடைய கண்கள் அடைக்கலான் குருவியின் மேல் உள்ளது. அவர் என்னையும் கவனிக்கிறார் என்பதை நான் அறிந்துள்ளேன்“ அவர் உங்களை கவனிக்கறார். கவனியுங்கள். 42பிறகு அவர் தம்முடைய மகத்தான சிங்காசனத்தை விட்டு எழுந்திருப்பதை என்னால் காண முடிகின்றது. அவருடைய ஆசாரியத்துவ ஆடைகள் அவரை சுற்றி இருந்தது. ஆகவே அங்கே வெளியே நோக்கிப் பார்த்தார், அங்கே வடதிசையில் ஒரு மகத்தான இடி அங்கே அமர்ந்து கொண்டிருந்தது. அவர் கிழக்கு காற்றே, மேற்கு காற்றே, வடக்கு மற்றும் தெற்கு காற்றுகளே இங்கே வாருங்கள். இக்காலை நான் உங்கள் மேல் ஏறிச் செல்ல விரும்புகிறேன்“ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. அவைகள் அந்த இடியின் அடியில் சென்று, சிங்காசனத்தின் பக்கமாக உருண்டு வந்து நின்றன. ஆகவே அவர் இந்த பெரிய இடிக்குள் அவர் ஏறி அந்த குறுக்கு நெடுக்குமாக இருக்கும் அந்த மின்னலை கையில் பிடித்து அதை ஆகாயத்தில் பிளவுறச் செய்து... ஆகவே அவர்கள் அதின் உள்ளாக செல்ல கடைசி அடியை அவர்கள் வைத்தபோது, அவர் அந்த ஜீவ மரத்தின் அல்லது ஜீவ வழியின் வழியாக கீழே வந்து ஒரு பெரிய பனை ஓலையை விசிறியாகக் கொள்ளத்தக்கதாக பறித்தார். ஆகவே அவர்கள் அந்த எரிகின்ற அக்கினி சூளைக்குள் சென்ற வேளையில், அங்கே தேவனுடைய குமாரன் அவர்கள் நடுவில் நின்று கொண்டு, அந்த எரிகின்ற ஜுவாலைகள் அவர்களைத் தொடாதபடிக்கு விசிறிக் கொண்டிருந்தார், அவை நீண்ட நேரமாக எரிந்து கொண்டிருந்தது. உண்மையான, நேர்மையான சாட்சிகள். ஒரு உண்மையான சாட்சியின் பக்கம் தேவன் இருப்பார். அது சரி.. 43பிறகு, கவனியுங்கள், அந்த அக்கினி எரிந்து கொண்டு, மிக அனல்மிக்கதாக இருக்கையில், அந்த ராஜாவினுடைய இருதயம் கலக்கமடைய ஆரம்பித்தது. அவன், 'சென்று அந்தச் சூளையின் கதவைத் திறவுங்கள், ஒருக்கால் ஏதாவது சாம்பல்கள் இருக்கின்றதா என்று பாருங்கள்'' என்றான். ஆகவே அவர்கள் கதவை ஆட்டித் திறக்கையில், அவன் குதித்தெழுந்து எத்தனை பேர்களை நீங்கள் அங்கே உள்ளே போடுவீத்தீர்கள்?“ என்றான். ''மூன்று' என்றனர். அவன், ''நால்வரை நான் காண்கிறேனே. அந்த மற்றொருவர் தேவனுடைய குமாரனைப் போல் காணப்படுகிறாரே' என்று கூறினான். தம்முடைய சாட்சியோடு நின்று கொண்டிருத்தல். தேவன் எப்பொழுதுமே தம்முடைய சாட்சியுடன் இருப்பார். ஆமென். அது உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். தமக்காக சாட்சி கொடுப்பவர்களோடு தேவன் நின்று காரியங்களை வித்தியாசப்படுத்துவார். 44ஒரு காலத்தில் தாவீது என்னும் பேர் கொண்ட ஒரு சிறு ஆள் இருந்தான். போரில் இருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு உலர் திராட்சைகளை எடுத்துச் சென்றான். அவனுடைய தகப்பன் ஈசாய் அவனை அனுப்பியிருந்தான். சவுல் ராஜாவாக இருந்தான். ஒரு புறத்தில் பெலிஸ்தியரும் மறுபுறத்தில் இஸ்ரவேலரும் இருந்தனர், அவர்கள் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது, அதில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பிசாசு எப்பொழுதுமே செய்வது போல, அவன் கை மேலோங்கி இருக்கின்றது என்று அவன் நினைக்கும் பொழுது சகோதரனே, அவன் முழுவதுமாக அதை நெருக்கித் தள்ளுவான். ஆகவே அவன் அங்கே ஒரு மகத்தான பெரிய ஆளை கொண்டவனாயிருந்தான். அவன் சுமார் ஏழு அடி அல்லது எட்டு அடி உயரம், ஒருக்கால், சிறிது இன்னும் அதிகமான உயரமாக' இருக்கலாம், ஒருவேளை பத்து அடி உயரம் இருக்கலாம். ஒரு பண்ணைக் கதவைப் போன்று மகத்தான பெரிய தோள்கள்; பெரிய ஈட்டியையும் கவசத்தையும் கொண்டிருந்தான். ஆகவே அவன் அங்கே வெளியே நின்று கொண்டு ''இப்பொழுது நாம் என்ன செய்யலாம் என்பதை நான் உங்களுக்கு கூறட்டும். இங்கே இந்த பெலிஸ்தியர்களுக்குச் சாட்சியாக இங்கே நான் நிற்கின்றேன்.' அந்த பக்கத்திலிருந்து ஒரு சாட்சி இங்கே வரட்டும். சேனைகள் சண்டையிடத் தேவையில்லை, ஆனால் நாங்கள் வெளியில் வந்து சண்டையிடுவோம். ஆகவே, நான் அவனைக் கொன்றால், நீங்கள் எல்லாரும் எங்களைச் சேவிக்க வேண்டும். அவன் என்னைக் கொல்வானானால், அப்பொழுதே நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராக இருப்போம்' என்று கூறினான். பிசாசு எப்படி செய்கிறான் என்று பாருங்கள்? அவன் கை மேலே ஓங்கியிருக்கிறதென்று அவன் நினைத்துக் கொண்டால், அவன் செருக்குடன் பேசி பெருமிதம் கொள்வான், ஜம்பப்பேச்சு பேசுவான், இன்னும் மற்றவைகளைச் செய்வான். 45ஏழு அடி உயரம் கொண்ட சவுலும் கூட சென்று அவனை சந்திக்க பயந்தான். இஸ்ரவேலின் சேனைகள் தோற்கடிக்கப்பட்டு பின்னால் மலைகளின் மேல் நின்று கொண்டு அக்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து, இங்கே நடந்து கொண்டு ஒரு சிறிய பையன் வருகிறான். சிறிய, சிவந்த மேனியைக் கொண்ட பையன்; மிகப் பெரியவன் அல்ல; சிறிய, ஒல்லியான, மெலிந்து போய் காணப்பட்ட பையன். ஆனால் அந்தப் பழைய ஆட்டுத் தோல் மேலாடைக்குள், மற்ற எல்லாரும் கொண்டிராத, ஏதோ ஒன்று துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவன் அங்கே நடந்து சென்று சில உலர்ந்த வறுத்த திராட்சைகளைத் தன்னுடைய சகோதரர்களுக்கு கொடுத்து யுத்தத்தைக் குறித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்த பெரிய இராட்சதன் தவறான நேரத்தில், வெளியே வந்து, இங்கே வந்து எங்களுடன் மோதுவது யார்?“ என்ற செருக்கான பேச்சைப் பேசினான். தாவீது, “யார் இந்த ஆள்?'' என்றான். 'ஜீவனுள்ள தேவ னுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியனை விட்டுவிடுவோம் என்று நீங்கள் என்னிடம் கூறமுனைகிறீர்களா? தேவனுடைய வல்லமைகளுக்குச் சாட்சியாக யாராவது ஒருவரை நாம் அங்கே நிறுத்துவோம்!'' என்றான். அவர்கள் எல்லாரும் பயந்துப் போயிருந்தார்கள். அவன்,''நானே - செல்வேன்” என்றான். அந்த தைரியம் எனக்கு பிடிக்கும். ''நான் போகிறேன். அவனுடன் நான் சண்டையிடட்டும்''. 46என்ன, அவன் மேலே நடந்தான். அவர்கள் அவனை சவுலினிடத்தில் அழைத்துச் சென்றனர், சவுல் 'நல்லது, அந்த மனுஷன் தன்னுடைய ... என்ன, அவனோ தன்னுடைய சிறு வயது முதல் யுத்த வீரனாகயிருக்கின்றான், நீ ஒரு இளைஞன் மாத்திரமே.' என்றான். ''கவனியுங்கள்! அல்லேலூயா இங்கே இது. எனக்கு பிடிக்கும். தாவீது சவுலிடம் கவனியும், உம்முடைய அடியான். இந்த கவண் கல்லைக் கொண்டு, ஒரு கரடியை நான் கொன்று போடும்படிக்கு கர்த்தர் செய்தார். சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு ஆட்டைத் தப்புவித்து, அந்த சிங்கத்தை நான் கொன்று போட அவர் செய்தார். அதின் தாடியைப் பிடித்து அந்த ஆட்டை நான் வெளியே எடுத்தேன். நான் ஒரு சாட்சி'' என்றான். அல்லேலூயா! அவன் எங்கோ இருந்தான். ஏதோ ஒன்றை அவன் கண்டிருந்தான். அவன் தேவனுடைய வல்லமையை ஒரு சோதனைக்கு வைத்தவனாயிருந்தான். ஆகவே அவன் ஒரு சாட்சியாக இருந்தான். அதுதான் நமக்கு இன்று தேவையாயிருக்கின்றது, இன்னும் கூடுதலான தைரியம். அது சரி. ஆம், ஐயா. அவன் நான் எதைக் குறித்து, பேசுகிறேனோ, அதைக் குறித்த சாட்சி நானே'' என்றான். அல்லேலூயா பல இடங்களைப் பார்த்தவனாய், ஏதோ ஒன்றை கண்டு தான் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை அறிந்திருக் கின்ற ஒரு சாட்சிதான் இன்றைக்கு ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குத் தேவையாயிருக்கின்றது. 47அவன் “தேவனுடைய வல்லமைக்கு நான் ஒரு சாட்சி. ஒரு கரடி ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடிக்க வந்தது, நான் அதைக் கொன்று போட்டேன்'' என்றான். ஒரு சிங்கம் வந்தது, கரடியை பிடித்தேன். அதின் தாடியைப் பிடித்து அதை அடித்துக்கொன் றேன்'' என்றான். அவன் ஆகவே அந்த சிங்கத்தையும் கரடி யையும் கொன்று போட எனக்கு உதவின தேவன் இந்த விருத்த சேதனமில்லாத பெலிஸ்தனையும் என் கரங்களில் கொடுப்பார் என்பது எவ்வளவு நிச்சயம்?'' என்று கூறினான். அல்லேலூயா! அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று அவர்கள் கூறும் நாட்களில், அவர்கள் “பழைய கால மதம் எதற்கும் உத வாது; அது தாத்தாவிற்கும் பாட்டிக்கும் மட்டுமே இருந்த ஏதோ ஒன்று என்று கூறும்போது, சகோதரனே, பழைய நாகரீக பரிசுத்த ஆவியினுடைய , வான - நீலம், பாவம் - கொல்லி மதத்தினுடைய சில சாட்சிகள் இன்றிரவு இருக்கிறார்கள் என்று நான் சந்தோஷ - மடைகிறேன். உங்களுடைய இருதயம் தூய்மையாக இருக்கத் தக்கதாக அது பிசாசினுடைய ஆதாமிய வல்லமைகளை, அதே சுபாவத்தை கொன்றுபோடுகின்றது. அல்லேலூயா ஓ ஒரு சாட்சி! ஆதலால், ஓ, என்னே ! (சபையார் களிகூறுகின்றனர்-ஆசி). ''ஜனங்கள் மிகவும் சத்தம் போடுபவர்களாயுள்ளனர்'' என்பர். ஏன், அவர்கள் சத்தம் போடுகிறதற்கு ஏதோ ஒன்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக கவனியுங்கள், வேதாகம மதமானது எப்பொழுதுமே சப்தம் நிறைந்த ஒன்றாய் இருந்து வருகின்றது என்பதை நான் உங்களுக்கு நிருபிப்பேன். ஆம். தேவன் யோபுவிடம் கூறினார், 'நீ... நீ எங்கேயிருந்தாய். தான் ஒரு மகத்தான் மனிதன் என்று யோபு நினைத்துக் கொண் டிருந்தான். ''நான் உலகத்தை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?“ 48அன்றொரு நாள், யாரோ ஒருவர் “சகோதரன் பில்லி, நீர் கொண்டிருக்கிற அந்த புதுவிதமான மதத்தை இன்னுமாக நீங்கள் பிரசங்கிக்கின்றீரா?” என்றார். நான் இல்லை ஐயா, இருப்பதிலேயே மிகப் பழமையான, இருப்பதிலேயே உண்மையான, இரட்சிப்பை அதினுள் கொண்டிருக்கின்ற மதத்தையே நான் பிரசங்கிக்கிறேன்“ என்றேன். ''அந்த புதிய விதத்தின் சில காரியங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்களிடத்தில் இருக்கவேயில்லையே'' என்றார். நான் “உமக்கு இதை நான் கூறட்டும், சகோதரனே, அது உலகத்தை விட பழமையானது” என்றேன். அது சரி. ''யோபே'', ''நான் உலகத்தை அஸ்திபாரப்படுத்து , கிறபோது நீ எங்கேயிருந்தாய், அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம் பீரித்தார்களே.'' என்றார். உலகம் அஸ்திபாரப்படுத்துகிறதற்கு முன் இலட்சக்கணக்கான ஆண்டுகள்! ஆமென் வியூ அது சரி. சாட்சி (சகோதரன் தன் கரங்களை சேர்த்து ஒரு தடவை தட்டு , கிறார்). 49இப்பொழுது, அந்த மகத்தான ஆசாரியனாகிய ஆரோன், இரத்தத்தை எடுத்துக்கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்ற போது, ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவனுக்கு அவர்கள் உடுத்துவித்தனர். அவன் ஒரு குறிப்பிட்ட முறையில் அவன் நடந்து செல்ல வேண்டியவனாயிருந்தான். அவன் தேவனுக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டியவனாயிருந்தான். ஆகவே அவன் இரத்தத்தை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான். அவனுடைய ஆடைகளில், அதனடியில் மாதுளம் பழத்தில் ஒரு மணி இருந்தது; மாதுளம் பழத்தில் ஒரு பொன்மணி ... தேவன் அவனைக் கொன்றுபோடவில்லை என்பதை, அந்த மணி மாதுளம்பழத்தில் ஒலித்த காரணத்தினால் மட்டுமே அவர்கள் அறிந்து கொண்டனர். அவன் அங்கே உள்ளே இருக்கையில், அவன் உயிருடன் இருக்கிறான் என்று அவன் அறிந்து கொள்ள, ஜனங்கள் கவனிக்க அந்த மணியின் சத்தம் மட்டுமே ஒரே வழியாக இருந்தது. சகோதரனே, நான் உங்களுக்கு கூறுவதென்னவென்றால், அதைப் போலவே, இன்றிரவு மணிகளும், மாதுளம்பழங்களும் ஒன்று சேர்ந்து, கர்த்தருக்கென்று, ஒரு சாட்சியாக ஆனந்த சப்தமிடக் கூடிய அவைகள் நமக்கு தேவையாயிருக்கின்றது. தேவன் இன்னுமாக ஜீவித்து ஆளுகை செய்கிறார்! ஆமென்! சரி! எப்படிப்பட்ட ஒரு சாட்சி? மேலறைக்கு ஏறிச்சென்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட அந்த சாட்சிகள். அவர்கள் ஒரு மாதுளம் பழத்தையும் மணியையும் உண்டாக்கினர், ஒன்று கூடுதல் பரிசுத்த ஆவியின் ஊக்குவித்தலில், அவர்கள் குடிகாரரைப்போல் தள்ளாடினர். தேவன் இன்னுமாக சாட்சிகளைக் கொண்டிருக்கின்றார், அவர்களும் அதே விதமாகத் தான் இருக்கின்றனர். “எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலும் எனக்கு இந்த வல்ல மையின் சாட்சிகளாக நீங்கள் இருப்பீர்கள் ஆமென்! அல்லேலூயா! கவனியுங்கள்! 50தாவீது ''நீர் எனக்கு கூறமுற்படுவது என்னவென்றால் அந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தன்,'' வேறுவிதமாக கூறினால், ''கிறிஸ்தவனல்லாத, ஒன்றுமில்லாத அந்த மனிதன்...'' என்றார். விருத்தசேதனம் என்றால் என்ன? அங்குள்ள அந்த மனித னுடன் உள்ள பரிசுத்த ஆவி. ''தன்னுடைய எல்லா D.D. டி.டி. பட்டங்களை வைத்துக் கொண்டு நின்று ஜீவனுள்ள தேவனை நிந்திக்கிறான்?“ ஓ என்னே! 'அதை எப்படி அவனால் செய்யக்கூடும்? அவன் விருத்தசேதன . மில்லாதவன்'' என்றான். இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியானவரால் விருத்தசேதனம் பண்ணப்பட்டுள்ளோம். அந்த பரிசுத்த ஆவிதான் நம்முடைய விருத்தசேதனம். இந்த டாக்டர் பட்டம் பெற்றவர்கள், Ph.D., பி.எச்டி ஆய்வு பட்டம் DL.D. பட்டம் Double D, (இரட்டை D.D.) பட்டம் பெற்றவர்கள். அங்கு நின்று கொண்டு பழைய காலத்து மதம் சரி அல்ல'' என்று கூற நீங்கள் விழைகிறீர்களா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அது (பழைய காலத்து மதம் - தமிழாக்கியோன்) சரி என்றே நிரூபிக்கிறது.''ஜனங்கள் வரமாட்டார்கள்'' என்பர். ஆம், அவர்கள் வருவார்கள். ஆமென். 51வயது சென்ற யோவான் ஸ்நானகன், அவன் பிரசங்கிக்க : ஆரம்பித்தபோது, எல்லா காலத்தைக் காட்டிலும் ஒரு மகத்தான பிரசங்கியாக அவன் இருந்தான். அவன் ஒரு எளிய மனிதனாக இருந்தான். ஒன்பது வயதானபோது அவன் வனாந்திரத்திற்குள் சென்றான். அவன் ஒரு பி.எச்.டி. (Ph.D) பட்டம் பெறவில்லை . ஆனால் அவன் என்ன செய்தான்? தன் சட்டை கழுத்துப் பட்டையை திருப்பிவிட்டுக் கொண்டு அவன் வெளியே வரவில்லை, அல்லது அல்லது தேவனைத் துதிக்கும் துதிபாடல்கள் அல்லது அப்போஸ்தலர்களின் பிரமாணம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவன் தேவனுடைய சாட்சியாவான். அவன் யூதேயா வனாந்திரத்திலிருந்து, வெளியே வந்தபோது, பழைய ஆட்டுத் தோலை தன் மேல் போர்த்திக் கொண்டவனாய் இப்படிப்பட்ட ஒரு சுவிசேஷத்தையே அவன் பிரசங்கித்தான். ஓ, என்னே! ஆனால் எருசலேம் மற்றும் யூதேயா, மற்றும் யோர்தானைச் சுற்றிலும் இருந்த எல்லா மதங்களையும் அவன் கலக்கினான். ஏன்? அவன் கிறிஸ்துவை, ஒரு வரலாற்றுப் பூர்வமாக அல்ல, ஆனால் தற்பொழுது நிகழ்கின்ற, தற்பொழுது நிகழ்காரி யமாகவே பிரசங்கித்தான்.. அல்லலூயா! இன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், வரலாற்றையும் உலக முழுவதிலும் நாம் பிரசங்கிக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் உன்னைக் குறித்தென்ன, உன்னுடைய இருதயத்தில் புது ஜீவனாக உயிர்த்தெழுந்திருக்கின்றதா? பழைய ஜீவியம் மரித்துப் போயிற்றா? 52தாவீது, அந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியன் அங்கே வெளியே நின்று கொண்டு இந்தக் காரியங்களைக் கூறிக் கொண்டிருக்கத்தக்கதாக அப்படியே விட்டுவிடுவீர்களா?, நான் சென்று அவனுடன் யுத்தம் பண்ணுவேன்'' என்றான். ஆதலால், முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, சவுல் 'நல்லது, நீ செல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தால், என்னுடைய கவசத்தை நான் உனக்கு தருகிறேன். நான் என்னுடைய கேடகத்தையும், என்னுடைய தலைச்சீராவையும், என்னுடைய பட்டயத்தையும் உனக்குத் தருகிறேன்“ என்று கூறினான். ஓ, என்னே ! கவனியுங்கள். அந்த சிறிய தாவீது அந்தப் பெரிய காரி யத்தைப் பெற்றபோது... அந்த சிறிய தோள்களில் அதைப் போன்றது; அந்தத் தோள்களின் மீது அதைப் போன்ற கேடயம், அந்த மார்ப்பதக்கம், இவ்வாறு கற்பனை செய்து பாருங்கள், அவைகளை அணிந்து கொண்டபோது, அந்த சிறிய எளிய தாவீதால் நடக்க முடியவில்லை. 53கவனியுங்கள். ஒரு மத சம்பந்தமான கேடயம் ஒரு தேவ னுடைய மனிதனுக்கு பொருந்தாது. அது சரி. உங்களுடைய எல்லா வேதக்கல்லூரி படிப்பு தேவனுடைய வல்லமைக்குப் பொருந்தாது. உனக்கு வேதக் கல்லூரி படிப்பு தேவையில்லை, உனக்கு கல்வி தேவையில்லை. தேவனுடைய வார்த்தைக்கு ஒரு உண்மையான சாட்சியாக இருக்கத்தக்கதாக ஒப்புவிக்கப்பட்ட இருதயமே உனக்குத் தேவை. அது ஒரு தேவனுடைய மனிதனுக்கு பொருந்தாது. அவன் ''இதை என் மேலிருந்து எடுத்து விடும். உம்முடைய பி.எச்டி. (PhD) பட்டம் எனக்கு தேவையில்லை' என்றான். ஆமென் அவன், நான் ஒரு சாட்சி!'' என்றான். எதைக் குறித்து? அவன் நான் இந்தவிதமான காரியத்தை கையாண்டதில்லை. உங்களுடைய வேதக்கல்லூரி படிப்பைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சிங்கத்திடமிருந்தும் கரடியுடனிருந்தும் என்னை மீட்ட கர்த்தருடைய அந்த வழியை நான் பின்பற்ற என்னை விடுங்கள்'' என்றான். இன்றைக்கும் அதைத்தான் நான் கூறுகின்றேன் சகோதரனே, ஏதோ ஒரு உளவியல் தத்துவத்தைக் கொண்டு என்னை போக விடாதேயும், ஆனால் பாப்டிஸ்டின் வாயிலிருந்து என்னை மீட்டெடுத்த அந்த பழமை நாகரீக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு நான் செல்லட்டும். அந்த விதமாகவே நான் செல்ல அனுமதியும்.'' 54அவன் ''ஓ, நான் கையாளாத இந்த எல்லாவற்றைக் கொண்டும் என்னால் செல்ல முடியாது. அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. எப்படி நான் இந்த எல்லா காரியத்தையும், இந்த கோட்பாடுகளையும் அங்கே நின்று கொண்டு திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்க முடியும்? அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. என்னிடமிருந்து இவற்றை எடுத்துப் போடுங்கள்'' என்றான்.“ ஆதலால் அவர்கள் அதை எடுத்து போட்டனர். அவன் நலமாக உணர்ந்தான். அவன் குனிந்து தன்னுடைய சிறிய கவணை எடுத்துக் கொண்டான். அவனுக்கு விரைவாக ஓட வேண்டும் போலிருந்தது. உங்கள் கையில் உங்களுடைய கவணை நீங்கள் எடுத்துக் கொள்கையில் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆகவே கோலியாத் “நீ அதைக் குறித்து என்ன செய்யப் போகின்றாய்?” என்றான். தாவீது, ''நான் வருகிறேன்'' என்றான். ஆமென். தன்னுடைய சிறிய கவணை எடுத்து, சமவெளி அப்பால் ஓடி ஐந்து கற்களை எடுத்தான். ஒன்றை அதினுள் வைத்து, அதை தன்னுடைய கைகளில் சுற்றி வைத்துக் கொண்டான். 55ஆகவே கோலியாத், ''என்ன என்னிடம் கூற விழைகிறாய், அந்த அந்த சிறிய பரிசுத்த உருளையன், அல்லது நீ, அந்த சிறிய பையன், படிப்... அல்லது அவன் என்னவாயிருந்தாலும் என்னை சந்திக்க வருகிறானா? எனக்கிருக்கும் பட்டங்கள் மற்றவைகள், என்ன, அவனிடம் என் நேரத்தை செலவழிக்க முடியாது. தெய்வீக சுமளித்தலை குறித்து பேசுவதா, தேவனுடைய வல்லமையை குறித்து பேசுவதா, இரட்சிப்பைக் குறித்து பேசுவதா, அவனிடம் என் நேரத்தை செலவழிக்க முடியாது“ என்றான். ஆனால் தான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தானோ அதற்கு அவன் சாட்சியாயிருந்தான்.. ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தாங்கள் எதைக் குறித்து பேசுகின்றனர் என்பதைக் குறித்த சாட்சியாயிருப்பார்களானாலும், நீ கவலை கொள்ளாதே, அவர்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும், ஏனெனில் சுபாவத்தை கொல்லும் காலமானது வரும், சகோதரனே, ஐயத்திற்கிடமில்லாத மெருகீடு வரும். அது சரி. ஆம், ஐயா. அது சரி. 56அவன் அந்தச் சிறிய பழைய கல்லை அந்த கவணிற்குள் வைத்தான். இதோ அவன் அந்த சிற்றோடைக்கு அப்பால் சென்று அதை சந்திக்கத்தக்கதாக மலையின் மேல் ஓடுகின்றான். 57'என்ன', அவன் பார்!'' என்றான். அவன் “நீ என்னை ...' அவன், 'நல்லது, உன்னை, நான் உன்னை என் ஈட்டியின் முனையில் குத்தி தூக்குவேன்'' என்றான். ஒருக்கால் முப்பது நாற்பது அடி நீளமாக இருந்திருக்கும். 'உன்னை தூக்கி, இன்றைக்கு உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடத்தக்கதாக கொடுப்பேன்”என்றான். இப்பொழுது ஒரு சாட்சியாளனாகிய தாவீதைக் கவனியுங்கள். தான் எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதை அறிந்தவனாக இருந்தான். அவனுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தது. நிச்சயமாக, அது அவனுக்கு எதிராக இருந்தது. ஆனால் அவன் அறிந்திருந்தான், தான் கொண்டிருக்கின்ற... அவன் ஒரு சாட்சியாக இருந்தான். தான் எதைக் குறித்து பேசுகின்றான் என்பதை அறிந்தவனாக இருந்தான். ஆதலால் அவன், 'நீ ஒரு பெலிஸ்தியனாக, பெலிஸ் தனுடைய நாமத்திலே, கவசத்தோடும், ஈட்டியோடும் என்னை சந்திக்க வருகின்றாய். ஆனால் நான் உன்னை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் சந்திக்கிறேன்“ என்றான். ஆமென். இதோ வித்தியாசம் (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார்-ஆசி). அதுதான் வித்தியாசத்தை உண்டாக்கினது. ஆகவே அவன் இன்று?', 'கொன்றுபோடுவேன்” என்றாள். என்ன, அந்த இராட்சதன் அவனைப் பார்த்து சிரித்தான், அவனை கொன்று போட விழைந்தான். 58சிறிய தாவீது ஆரம்பித்தான். அவன் கவணை எடுத்தபோது, அவனிடம் ... கவனியுங்கள், அவன் ஐந்து கற்களை, (J-E-S-U-S) ஜீசஸ், ஐந்து விரல்களில் வைத்தான் (f-a-i-t-h) (வி -சு - வா - சம்). சகோதரனே, அவன் சுற்றிலும், சுற்றிலும், சுற்றிலும் காரியமானது சரியாகக் கிரியை செய்யும்படிக்குச் செய்தான். ஆகவே நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு, உங்களுடைய ஆத்துமாவில் அது ஓயாமல் அசைவாடுமானால் ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. பாவமும் வியாதியும் உங்களை விட்டு அகன்று விடும்; கோடைக் காலத்தில், வெளிச்சமானது பிரகாசிக்கும்போது தரையில் சிதறியோடுகின்ற கரப்பான் பூச்சிகள் போல பிசாசுகளும் சிதறி ஓடும். இதோ அவன் வருகிறான், இயேசுவில் உள்ள விசுவாசம் (f-a-i-t-h) இதோ அவன் வருகிறான், 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் நான் உன்னை சந்திக்கிறேன்'', ஆகவே அவன் அந்த கவணைச் சுழற்றினான், பரிசுத்த ஆவியானவர் அந்த கல்லை அந்த பெலிஸ்தனுக்கு நேராக மேலே எறிந்து அவனைக் கொன்றார். தாவீது அவனுடைய சொந்த பட்டயத்தை எடுத்து அவனுடைய தலையை வெட்டி, அதைப் பிடித்துக்கொண்டு, ''வாருங்கள், பையன்களே தேவன் அதைச் செய்வார் என்று நான் உங்களிடம் கூறினேனே, இதோ அது.''என்றான். அல்லேலூயா! அவன் ஒரு சாட்சியாயிருந்தான். தான் எதைக் குறித்து பேசுகிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அதை முயற்சித்துப் பார்த்தான். அவன் அதை நிரூபித்தான். கவசம் மற்றும் ஈட்டியைக் குறித்து அவன் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை, ஆனால் தன்னுடைய கரத்தில் என்ன இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் அவனுடன் இருந்தார். அதைப்போன்ற உங்களுடைய பெரிய கருத்துக்கள் போன்ற . வற்றைக் குறித்து நமக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது. ஆனால் பரிசுத்த ஆவி என்னவென்பது நமக்குத் தெரியும், அது நமக்கு என்ன செய்கிறது என்பதும் நமக்கு தெரியும், ஆதலால் நாம் ஒரு சாட்சியாக இருக்க விரும்புகிறோம். இப்பொழுது நீங்கள் ஒரு சாட்சியாக ஆகும் முன்னர், முதலாவதாக, நீங்கள் சென்று அதை பெற்றுக் கொள்ள வேண்டும். 59ஒரு சமயம் எலியா என்னும் பெயரைக் கொன்ட ஒரு ஆள் இருந்தான். தேவன் அவனோடு இருந்தார். அந்த பெரிய சோதனைகளில் தேவனை, தேவன் காரியங்களை நடப்பிப்பதை அவன் கண்டான். ஆதலால் தேசத்தின் மேல் பாவம் வருவதைக் கண்டான், ஆகவே அவன் ''இப்பொழுது ஒரு நிமிடம் '' என்றான்.“ அவன் அங்கே மேலே சென்று ஜெபித்தான், தேவன் அவனுக்கு ஒரு சாட்சியை அளித்தார். அவர்,''இப்பொழுது நீ கீழே சென்று ராஜாவை நோக்கி நான்...நீ அதை வரவழைக்கும் வரை ஒரு பனித்துளியும் கீழே விழப்போவதில்லை என்று கூறு'' என்று கூறினார். அவன் கீழே சென்று அதை ராஜாவிடம் கூறுகிறான். பிறகு அங்கே மேலே சென்று உட்கார்ந்துக் கொண்டான். அவன் ஆகவே அங்கே ... உங்களால் கற்பனை செய்ய முடிகின்றதா? ''அந்த கிழவனுக்கு மூளை குழம்பி விட்டது. பாருங்கள்? என்ன, தான் அதை வரவழைக்கும் வரை மழை பெய்யாது என்று அவன் கூறு கிறானே.'' என்று சில ஜனங்கள் கூறினதை என்னால் கேட்க முடிகின்றது. ஆனால் அவன் தேவனுடைய சாட்சியாக இருந்தான். தான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்த வனாக அவன் இருந்தான். தேவன் என்ன செய்வார் என்பதை அவன் அறிந்தவனாக இருந்தான், ஏனெனில் தேவன் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார். எலியா அதை அறிந்திருந்தான். ஆதலால், மழை பெய்யப் போவதில்லை என்று தேவன் அவனிடம் கூறினதை அவன் அறிந் திருந்தான், ஆகவே அவன் சென்று மழை பெய்யாதிருக்கும் என்று கூறினான். 60நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறலாம் என்று தேவன் கூறுவாரானால், போய் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். சுகமளிப்பு உனக்குத்தான் என்று தேவன் கூறுகின்றார் என்றால், அப்படியானால் போய் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீ ஒரு சாட்சியாய் இருந்தால், சென்று கொண்டேயிரு, அவருக்கு சாட்சியாய் இரு. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அவரால் பொய்யுரைக்க முடியாது. அவர்கள், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன“ என்று கூறினாலும் பரவாயில்லை, அதை அப்படியே விட்டு விடுங்கள். நாம் எடுப்பது தேவனுடைய வார்த்தையாகும், யாரோ ஒருவருடையது அல்ல. 61முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, இதோ. வயதான எலியா வருகிறான், அங்கே மேலே செல்வதை என்னால் காண முடிகிறது. ஆகவே அவன், ''இப்பொழுது அந்த வயதான பைத்தியக் காரனைப் பாருங்கள்! அங்கே இருக்கின்ற அந்த மலையின்மேல் சென்று, அந்த கேரீத் ஆற்றண்டையில் அமர்ந்து கொண்டான். என்ன அங்கே மேலே இருக்கின்ற கிழவன் நீண்ட நரைத்த தாடி. அவனுக்கு எழுபத்தைந்து வயது இருக்கும், கையில் ஒரு தடியை வைத்திருக்கிறான். ஒரு சிறிய கலசத்தில் எண்ணெய், என்ன, அங்கே மேலே பட்டினியால் இறந்துவிடுவான் என்ன என்றான். ஆனால், சிறிது கழித்து, அந்த பஞ்சம் வந்தது, அது பரவத் துவங்கினது. ஆகவே “உங்களுக்குத் தெரியுமா, அவனைப் பயித்தியக்காரன் என்று நினைத்திருந்த அங்கே கீழே இருந்த அந்த ஜனங்கள் அவன் ஒரு நாளில் மூன்று வேளை ஆகாரம் சாப்பிட்ட ஒரு நல்ல பொழுதை உடையவனாக இருந்தான் என்பதை கவனிக்க நேர்ந்தது. ஆம். இன்றிரவு இங்கே இருக்கின்ற அநேக ஜனங்களைக் காட்டிலும் அவன் நல்ல நிலைமையில் இருந்தான். அவன் சில சுமை சுமக்கும் வேலையாட்களைக் கொண்டிருந்தான். அந்த சுமையாட்கள், அது சரி, காகங்கள் ஒவ்வொரு நாளும் வந்து, அவனுக்கு இறைச்சிக் கலவை வைக்கப்பட்டிருந்த இரு ரொட்டிகளால் ஆன பலகாரத்தை, அவனுடைய காலை உண வாகக் கொண்டு வந்து கொடுத்தன. 62சில சமயத்திற்கு முன்னர் யாரோ ஒரு ஆள் பிரசங்கியே, நீர் அதை விசுவாசிக்கிறீர் என்று கூற விழைகிறீரா?'' என்று கேட் டான். . நான், ''ஆம், ஐயா.“' என்றேன். அவன், ''அவன் சாப்பிட்டான் என்று நீர் விசுவாசிக்கிறீர் என்று எனக்கு கூற முற்படுகிறீரா?“ என்றான். நான், “ஆமாம், அவன் சாப்பிட்டான்” என்றேன். '' எப்படி நீர்... அவனுக்கு எங்கிருந்து மீன் கிடைத்தது?'' நான்,“எனக்குத் தெரியாது.” என்றேன். ''அவனுக்கு எங்கிருந்து அப்பம் கிடைத்தது“ நான், “எனக்குத் தெரியாது” என்றேன். அவன், ''அவன் ஒரு ரொட்டி கடைக்கு சென்றிருப்பான் என்று நீர் நினைக்கின்றீரா?“ என்றான். நான், ''உனக்கு என்னால் கூறமுடியாது. ஆனால், எனக்கு தெரிந்த ஒரேயொரு காரியம், காகங்கள் அதைக் கொண்டு வந்தன. அவன் அதைச் சாப்பிட்டு, அதற்கு நன்றியுள்ளவனாக இருந்து, தேவன் தன்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறினாரோ அதைச் செய்தான். என்றேன். 63பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அதே விதமாகத்தான். நீங்கள், ''அந்த ஜனங்களை சத்தமிடச் செய்வது என்ன?' எனலாம். எனக்கு தெரியாது. ''நீர் என்ன கூற முற்படுகிறீர்?''அது பரலோகத்தை விட்டு, தேவனிடமிருந்து வருகின்ற மன்னா. ''உண்மையாகவே ஏதோ ஒன்றை நீங்கள் உணர்கிறீர்கள் என்கிறீர்களா? நான் அதை நம்புவதில்லை'' நல்லது, நீ செய்யத் தேவையில்லை. பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வருகிறார். நான் அதை அப்படியே புசித்து, திருப்தியாகி, பிறகு சத்தமிட்டு ஒரு நல்ல சமயத்தை உடையவனாக இருக்கிறேன். உலகமானது சென்று தாங்கள் எதை நம்ப வேண்டும் என்று விரும்புகின்றனரோ அதையே செய்யட்டும். அந்த பரிசுத்த ஆவி!''ஆனால் எங்கிருந்து அவர் அதை பெறுகின்றார்? எங்கிருந்து மன்னா வருகின்றது? நீங்கள் காணமுடியாத, காற்றிலிருந்து ஏதாவதொன்று எங்கிருந்து வரும்?'' எனக்குத் தெரியாது, ஆனால் அது இங்கே வருகின்றது. ஆமென். அதற்கு நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்களா? (சபையார், ''ஆமென்' என்கின்றனர் - ஆசி). கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ('ஆமென்“) எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ('ஆமென் ) இன்றிரவு உங்கள் உயிரைப் போல இரட்சிப்பிற்கென தேவனுடைய வல்லமையான அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உண்மையானதாய் இருக்கிறது. நிச்சயமாக, அது அருமையானது. 64அவன் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டான். அவன் குடிக்க ஆயத்தமானபோது, அவன் அந்த ஆற்றண்டை வந்து பருகினான், அவ்வளவுதான். அவன் பயித்தியக்காரன் என்று அவர்கள் நினைத்தனர். இல்லை. அவன் தேவனுடைய சாட்சியாக இருந்தான். அது சரி. ஆகவே முதலாவதாக என்ன என்று உங்களுக்குத் தெரியுமா, அந்த ஆறு வற்றிப்போன பிறகு, அவர்,''இப்பொழுது உன்னை கவனித்துக் கொள்ளும்படிக்கு ஒரு விதவையை நான் ஆயத்தம் செய்திருக்கிறேன்'' என்று கூறினார். என்னே, ஒரு பிரசங்கி செல்லத்தக்கதாக எப்பேற்பட்ட ஒருஇடம், ஒருவிதவையின் வீட்டிற்கும் ஆனால் தேவன் ''நான் - நான் அதை ஆயத்தம் பண்ணி னேன்'' என்றார். ஆதலால் அவன் அங்கே செல்கிறான். அங்கேகீழே, அவன் ஒரு சாட்சியாக இருக்க வேண்டும். ஆகவே இந்த விதவை ... ஆகவே அவன் அங்கே செல்கிறான், அங்கே தெருவில் நடந்து கொண்டேசெல்கின்றான். தரிசனத்தின்படி, அந்த முற்றத்தில் ஒரு ஸ்திரீயை அவன் காண வேண்டியவனாக இருந்தான், அவ்வாறு தான் என்று எண்ணுகிறேன். அந்த முற்றத்தில் ஒரு ஸ்திரீயைக் கண்டான், அவன் அது அவள்தான். ஆகவே நான் மெதுவாக கூட நடப்பேன்“ என்றான். அவன், நீ சென்று, நான் குடிக்கிறதற்கு கொஞ்சம் தண்ணீரும் பிறகு ஒரு - ஒரு கொஞ்சம் அப்பமும், அல்லது - அல்லது ஒரு அடையைக் கொண்டு வா,'' கூறப்போனால்,“உன் கையிலே கொண்டு வா'' என்றான். அவள், ''உம்முடைய ஆத்துமா மரிக்காமல் இருக்கிறது போல, கர்த்தரின் ஜீவனைக் கொண்டு'' என்றாள். ''ஒருசிறிய அடையைச் செய்யும் அளவிற்கு பானையில் மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெய் மாத்திரமே நான் வைத்திருக்கிறேன். ஆகவே நான் இங்கே வெளியே சுடப்போகிறேன்... இரண்டு விறகு பொறுக்குகிறேன். இதோ எனக்கும் என் குமாரனுக்கும் அடையை செய்யப்போகிறேன். ஆகவேஅதை சாப்பிட்ட பிறகு, நாங்கள் செத்துப் போவோம்'' என்றாள். அவன், “போய் முதலில் எனக்கு ஒரு அடையைக் கொண்டு வா” என்றான். ஆமென். 65''முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தைத் தேடுங்கள்.'' அது உண்மை என்று நீங்கள் கண்டிருக்கிறீர்களா? தேவனை முதலில் வையுங்கள். முதலில் உங்கள் தசமபாகங்களைச் செலுத்துங்கள். முதலாவதாக எல்லா காரியத்தையும் செலுத் துங்கள். தேவனுக்கு செலுத்துங்கள். காலையில் முதலில் ஜெபம் செய்யுங்கள். நாள் முழுவதும் ஜெபியுங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தேவனுக்கு முதல் இடம் கொடுங்கள். நீங்கள் ஒரு சாட்சியாய் இருப்பீர்கள். அவள் நேராக உள்ளே ஓடுகிறாள். இரண்டு விறகுகளை அவள் வைத்திருந்தாள். அக்காலத்து வழக்கம் என்னவெனில், அவர்கள் இரண்டு விறகுகளை உபயோகித்தனர். இவ்விதமாக குறுக்காக அந்த இரண்டு விறகுகள் இருக்கும், அதன் நடுவில் நெருப்பு இருக்கும். இந்தியர்கள் இன்னும் அவ்விதம் செய்கின்றனர், அவை எரியும் போது கட்டைகளை உள்ளே நகர்த்திக் கொண்டேயிருப்பர். அது தான் சிலுவை, கிறிஸ்து, மத்தியில் நெருப்பு இருக்கும் இடம். அவர்கள் அந்த சிறிய போஜன பலியில் எடுத்து, பிசையப்பட்ட பலி, ''இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாத வராயிருக்கிறார்' என்ற முற்றிலும் அதேவிதமாக பிசையப் பட்டது. பரிசுத்த ஆவியாகிய எண்ணெயை அதனுள் ஊற்றி அதைக் கலத்தல். பரிசுத்த ஆவி, கிறிஸ்து; இப்பொழுது ஒருவித மான அப்பம் செய்யப்படுதல். சகோதரனே! ஆமென். ஓ, நான் பயித்தியக்காரன் என்று நினைக்காதீர்கள். நான் இன்றிரவு பக்திப் பரவசமாக மாத்திரமே உள்ளேன். அதுசரி. கவனியுங்கள், “முதலில் எனக்கு ஒரு சிறிய அடையை பண்ணிக்கொண்டு வா'' 66ஆதலால் அவன் கிறிஸ்துவாகிய போஜன பலியை எடுத்து, பரிசுத்த ஆவியை அதற்குள் ஊற்றி, அதைக் கலந்து, சிலுவையின் மீது வைத்து அதை சமைத்தான். ஓ, சகோதரனே, அப்பத்தைக் குறித்துப் பேசுவது, அது அவைகளில் ஒன்றாக இருந்தது! அவள் அந்த சிறிய அடையையும் அவள் வைத்திருந்த கடைசிச் சொட்டு தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். ஆகவே அந்தத் தீர்க்கதரிசி அங்கே நின்றுக் கொண்டு அதைப் புசித்து, தண்ணீரைக் குடித்தான். இப்பொழுது நீ திரும்பிச் சென்று உனக்கு ஒன்றும் உன் குமாரனுக்கு ஒன்றும் பண்ணு. ஏனெனில், கர்த்தர் உரைக்கிறதாவது தேவன் பூமியின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானை வெறுமையாவதில்லை, கலசம் உலர்ந்து போவதில்லை'' என்றான். என்ன? ஒரு சாட்சி. அது சரி. அந்த விதவை அந்த தேசத்திலே ஒரு சாட்சியாக இருந்தாள். 67அந்த மகத்தான தீர்க்கதரிசி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, எலியா எடுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய ஸ்தானத்தை, எலிசா எலியாவின் ஸ்தானத்தை எடுத்தான். ஓ, இந்த மாதிரியான ஒரு சாட்சியைக் குறித்து என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஒருநாள், அவன் புறப்பட்ட போது, எலியாவை அவன் கண்டான். ஆகவே அவன் (எலிசா - தமிழாக்கியோன்) தன் சால்வையை அவன் மேல் போட்டு, அவனை ஆசீர்வதித்தான், ஆகவே அவன் (எலிசா - தமிழாக்கி யோன்) அந்த ஏர் மாட்டைக் கொன்று ஒரு பலியைச்செலுத்தி, உலகத்தின் எல்லா காரியங்களும் தனக்கு பின்பாக மரித்துப் போனது என்று காண்பித்தான். அது தான் தேவனிடம் வரவேண்டிய வழி ஆகும். உன் பின்னால் இருக்கின்ற எல்லாவற்றையும் கொன்று போடு. எல்லா இணைப்புகளையும் எரித்துப்போடு. நீ நாளைக்கு காணவேண்டும் என்பதற்காக அந்த பாட்டிலை மேலே வைக்காதே. நாளை அதை பார்க்க வேண்டும் என்று இந்த மற்றைய காரியங்களை வைக்காதே. அதை அகற்றி எரித்து விடு. ஆமென். ஒரு உண்மையான சாட்சியாக இரு. சகோதரனே, வெறுங்காலோடு வெளியே வா. அதுதான் வழி. இந்தவிதமாக சொல் உணர்ச்சி தொனிக்காக என்னை மன்னியுங்கள், ஆனால் அதைக்கூற அந்த ஒரே வழிதான் எனக்குத் தெரியும். அதுசரி, ஆதலால் இப்பொழுது நீங்கள் நீங்கள். இங்கே சுற்றிலும் காரியங்கள் சம்பவிக்கப் போகின்றன. அது சரி. கவனியுங்கள். 68பிறகு அவன் கில்காலிலிருந்து புறப்பட்டு, தீர்க்கதரிசிகளின் புத்திரரிடத்திற்கு போனான். ஆகவே நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அந்த தீர்க்தரிசிகளின் புத்திரரிடத்திற்கு சென்றடைந்தபோது, அவன்,''கர்த்தர் என்னை யோர்தானுக்கு வழி நடத்துகிறார்“ என்றான். எலிசா எலியாவைப் பின்பற்றின் அந்த மூன்று கட்டங்கள். ஆகவே எலியா கிறிஸ்துவிற்கு நிழலாக இருந்தான்; எலியா. எலிசா, சபைக்கு நிழலாக இருந்தான். ''நான் கில்கால் வரை செல்லுகிறேன்,'' முதலாவதாக, விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல். ஆகவே பிறகு அவன் “இப்பொழுது நீ இங்கே இரு என்று சபையிடம் கூறினான். எலியா, எலிசாவிடம்; எலியா... வாலிப மற்றும் வயதான தீர்க்கதரிசி, கிறிஸ்து மற்றும் சபையின் நிழல். அவன், ''உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன், நான் இங்கே இருக்கமாட்டேன், ஆனால் நான் உம்முடனே வருவேன்“ என்று கூறினான். 69ஆகவே அவன் கில்காலிற்குச் சென்றான். அவன் அங்கே சென்றடைந்தபோது, ''இப்பொழுது நீ இங்கே இரு. தீர்க்கதரிசி களின் புத்திரரிடத்திற்கு கர்த்தர் என்னை அழைக்கின்றார்'' என்று கூறினான். ஆதலால் அவன், ''நான் உம்முடன் வருவேன். நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்'' என்றான். அதுதான் சபை ஆகும். பாருங்கள்? உங்கள் கண்களை இயேசுவின் மேல் வைத்திருங்கள். அவர் எங்கெல்லாம் செல் கின்றாரோ, நீங்கள் செல்லுங்கள். அவர் மெத்தோடிஸ்ட் சபையை விட்டு வெளியே செல்வாரானால், நீங்களும் சரியாக அவருடன் செல்லுங்கள். அவர் பிரான்ஹாம் கூடாரத்தை விட்டுவெளியே செல்வாரென்றால், நீங்களும் சரியாக அவரோடு செல்லுங்கள். ''நான் உம்மை விடமாட்டான். அம்மா எதைச் சார்ந்திருந்தாலும், அப்பா எதைச் சார்ந்திருந்தாலும், இது அல்லது வேறொன்று நிகழ்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல; நான் உம்முடன் வருவேன். நான் உம்மை விடமாட்டேன்'' அல்லேலூயா! ''நான் உம்முடைய சாட்சி. என்னால் செல்ல முடியாது; நீர் என்னுடைய பாகமாக இருக்கிறீர்.'' “சரி வா, நான் பின் தொடருகிறேன்.” ஆகவேஅவன் தீர்க்கதரிசியின் பள்ளிக்கு செல்கிறான். ' பிறகு அவன், ''நீ இங்கே இரு“ என்றான். 70ஆகவே தீர்க்கதரிசிகளில் சிலர் எலிசாவிடம் கூறினர். அவன்''உன் எஜமான் உன்னை விட்டு எடுத்துக் கொள்ளப்படப்போகிறார் என்பது உனக்கு தெரியுமா?'' என்றான். அவன், ''எனக்குத் தெரியும். ஆனால் நீ சும்மா இரு'' என்றான். ஆமென். எனக்கு அது விருப்பமானதாகும். “மற்ற எல்லாரும் என்ன கூறினாலும் பரவாயில்லை, நான் சரியாக அவருடன் இருக்கப்போகிறேன்.'' ஆகவே எலியா திரும்பி, ''இப்பொழுது நீ இங்கே இரு, தேவன் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார்“ என்று கூறினான். மூன்று இடங்கள் : நீதிமானாக்கப்படுதல், கில்கால்; பரிசுத்த மாக்கப்படுதல், தீர்ககதரிசிகளின் பள்ளி; அதன் பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகம், யோர்தான், மரணத்திற்கு பிரதிநிதித்துவமாயிருக்கின்ற யோர்தான். கவனியுங்கள்! மார்டீன்லூத்தர்; ஜான் வெஸ்லி; முடிவு பெறும் நேரமாகிய யோர்தானுக்கு பெந்தெகொஸ்தே. 71ஆதலால், எலியா, எலிசாவுடன் நேராக நதியண்டை நடந்து சென்றான். ஆகவே பிரயாணத்தின் கடைசி கட்டமாகிய, மரணமாகிய, யோர்தானுக்கு அவர்கள் சென்றடைந்தபோது, அந்த வயதான தீர்க்கதரிசி கையைநீட்டி, தன்னுடைய சால்வையை எடுத்து தண்ணீரை அடித்தான், அந்தத் தண்ணீர் இந்த புறமும் அந்த புறமுமாகபிரிந்தது, ஆகவே அந்த இருவரும் குறுக்கே நடந்து, உலர்ந்த தரையில் நின்றனர். பிரசங்கிகள் அப்படியே நின்று, அவர்கள் கடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆமென். இப்பொழுது அவர்கள் மறுகரைக்கு சென்றடைந்தவுடன், பிறகு! ஓ! இது பிரான்ஹாம் கூடாரத்திற்குள் ஊறி, எலும்பிற்குள் இருக்கும் மெல்லிய கொழுப்புப் பொருள் வரை சென்றடையும் என்று நான் நம்புகிறேன். அவன் கில்காலில் இருந்த பொழுது அல்ல. அவன் தீர்க்கதரிசியின் பள்ளியில் இருந்த பொழுது அல்ல; அவன் யோர்தானின் இக்கரையில் இருந்த வரையிலும் அல்ல; ஆனால் அவன் யோர்தானைக் கடந்த பிறகு, பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவனைபின் தொடர்ந்த பொழுது. நீங்கள் விரும்பினால், 'நான் இயேசுவை என் சொந்த இரட்சகாராக ஏற்றுக்கொள்கிறேன். என் கெட்ட பழக்கங்களை நான் விட்டுவிடுகிறேன்“ என்று கூறுங்கள். நீங்கள் மரித்துப்போக வேண்டிய இடமாகிய யோர்தான் அண்டை வாருங்கள். அங்கே உலகத்தின் எல்லா காரியங்களும், உங்களுடைய எல்லா நண்பர்களும், மற்ற எல்லா காரியமும் உங்களைக் கைவிட்டனர், உங்கள் கண்ணை அவர் மீது மாத்திரம் வைத்திருங்கள். 72பிறகு என்ன? அவன், ''சரியாக யோர்தானினூடே உம்மோடு கூடவே நான் வரப்போகிறேன்'' என்று கூறினான். ஆமென். அது எனக்கு பிடிக்கும். ஏன்? 'இதற்கு ஒரு சாட்சியாக நான் இருக்கப் போகிறேன்.''ஆகவே அவன் யோர்தானூடே கடந்தான். கவனியுங்கள். இதோ அது இங்கே உள்ளது. நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவன் யோர்தானைக் கடந்த பிறகு, அப்பொழுது அவன்“ நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன?' என்றான். அது இன்றிரவு சபையைக் குறித்தென்ன என்பதை அறிய கிறிஸ்து விரும்புகிறார். ''உலகத்தின் காரியங்களிலிருந்து நீ வேறு பிரிக்கப்பட்ட பிறகு, இயேசு கிறிஸ்துவிற்குள் ஒரு புது சிருஷ்டியாக நீ ஆன பிறகு, நீ மறுபடியும் பிறந்த பிறகு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, யோர்தானைக் கடந்து, உலகத்தின் காரியங்களிலிருந்து நீ வேறு பிரிக்கப்பட்ட பிறகு, நீ மறுபடியும் பிறந்த பிறகு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, யோர்தானைக் கடந்து உலகத்தின் எல்லாகாரி யங்களும் மரித்து உனக்குப் பின்னால் இருக்கையில், இப்பொழுது நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேள்.'' அது எனக்கு பிடிக்கும். 73அவன், ''உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் இரட்டிப்பாய் என்மேல் வரவேண்டும்' என்றான். தான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றான் என்று அந்த பிரசங்கி அறிந்திருந்தான். ''இரட்டிப்பான வரம், ஏனெனில் அதைக் குறித்து இன்னும் அதிகமாக நான் சாட்சி கொடுக்க விரும்புகிறேன்.“ அவன், ''அரிதான காரியத்தைக் கேட்டாய். ஆனால் உன்னை விட்டு நான் கடந்து செல்கையில் என்னைக் கண்டால், உனக்கு கிடைக்கும். நீ எதைக் கேட்டாயோ அதைப் பெற்றுக் கொள்வாய் என்று கூறினான். இப்பொழுது சகோதரனே, ஒரு பிரசங்கி மற்றொருவனை கவனித்துக் கொண்டிருந்தைக் குறித்து நீ பேசுகிறாய்; அவன் உண்மையாக அவனை கவனித்துக் கொண்டிருந்தான் இரட்டிப்பான ஆவியின் வரத்தைப் பெற, சபையானது இன்றிரவு கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும், அது அசையும் விதத்தையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கின்றது. கவனியுங்கள். 74அவன் அரிதான காரியத்தைக் கேட்டாய்'' என்றான். ஆனால் அவனால் உலகத்தின் மேல் ஒரு கண்ணும் எலியாவின் மீது ஒரு கண்ணும் வைத்திருக்க முடியவில்லை. அவன் தன் இரண்டு கண்களையும் சரியாக நேராக எலியாவின் மேல் வைத்து, அவனை பின்பற்ற வேண்டியதாயிருந்தது. இனிறிரவு இருக்கின்ற தொல்லை என்னனிெல், கிறிஸ்தவர் களென்று கூறிக்கொள்கின்ற, ஒரு கண்ணை உலகத்தின் மேலும் மற்றொன்றை சிலுவையின் மேலும் வைத்திருக்கின்ற அநேக கிறிஸ்தவ ஜனங்களை நாம் கொண்டுள்ளோம். உலகம் எப்படி நிச்சயமாக விழப் போகிறதோ, அதே விதமாக நீங்களும் விழுவீர்கள். உங்கள் கண்கள் ஒற்றையாக தனித்ததாக இருக்கட்டும், உங்கள் இருதயம் தனித்ததாக இருக்கக்கடவது, உங்கள் சிந்தனைகளும் தனித்ததாக இருக்கக்கடவது. ஆமென், சகோதரனே, அது வன்மையாய் அறிவுறுத்துகிறது (rubs in) ஆனால் அது புண்படுத்துகிறது, ஆனால் அது நல்லது. 75நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கையில் எல்லா நேரமும் நாங்கள் விளக்கெண்ணெயைக் குடிப்போம். அங்கே பின்னால் இருக்கின்ற தாயார், எனக்கு விளக்கெண்ணெயைக் கொடுப் பார்கள், நான் என் மூக்கை பிடித்துக்கொள்வேன், விழுங்க கடினமாக இருக்கும். அவர்கள் கூறுவார்கள், ''தேனே, அது...'' நான், “அது எனக்கு வாந்தியுண்டாக்கி அசௌக்கியமடையச் செய்கிறதே” என்பேன். அவர்கள் அது உனக்கு அசெளக்கியமடையச் செய்யவில்லை யெனில், அது உனக்கு எந்த நன்மையும் செய்யாது என்ற கூறுவார்கள். ஆதலால், ஒருக்கால், அதோ அது. ஒருக்கால், அந்த சுவிசேஷம் அதே விதமாக அளிக்கப்பட வேண்டுமா? அது உன்னை கலக்கவில்லையெனில், அது எந்தவித நன்மையும் பயக்காது. உங்கள் கண்களை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். சென்று கொண்டேயிருங்கள். உலகம் என்ன கூறினாலும் அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். சென்று கொண்டேயிருங்கள். தேவனுடைய புத்திரராயிருப்பவர்கள் தேவனுடைய ஆவினால் நடத்தப்படுகிறார்கள்“ அது சரியா? ''ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின் அல்லது உலகத்தின் காரியங்களின்படி நடவாமல், ஆனால் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.'' ஆக்கினைத் தீர்ப்பே இல்லை; நடந்து கொண்டிருத்தல். இப்பொழுது கவனியுங்கள். 76ஆகவே அவன் எடுத்துக்கொள்ளப்படுகையில், சிறிது நேரம் கழித்து ஒரு அக்கினி இரதம் கீழே வந்து அவனை எடுத்துக் கொண்டது, அவன் அதன் மீது ஏறினான். ஆகவே அவன் மேலே செல்கையில், தன் சால்வையை இழுத்து இப்படி வைத்துக் கொண்டு, அதை வீசி எறிந்தான். அது தரையில் விழுந்தது, அந்த குதிரைகள். ஆகவே அக்கினி இரதம் அவனை எடுத்துக் கொண்டது. ஒ, நீங்கள் இதை இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டும்மென்று நான் விரும்புகிறேன். என்ன ஒரு அழகான நிழலாட்டம்! அவன் (எலியா - தமிழாக்கியோன்) கொண்டிருந்த எல்லா வல்லமைக்கும், தன்னுடைய சாட்சியாக அப்பொழுது இருந்த ஒருவன், அந்த வாலிப தீர்க்கதரிசி எலிசா ஆவான். எலியாசெய்த எல்லா காரியங்களுக்கும் எலிசா அவனுடைய சாட்சியாக இருந்தான். பிறகு அவன் அதே சால்வையை எடுத்து தன் தோள்களின் மேல் வைத்து, யோர்தானை நோக்கி நடக்கத் துவங்கினான். ஒரு பரிபூரண, அழகான நிழலாட்டம். அவன் யோர்தானுக்கு நடந்து சென்று, சால்வையை எடுத்து, தன் கைகளில் பிடித்துக்கொண்டு தண்ணீரை அடித்தான். “எலியாவின் தேவன் எங்கே?'' என்றான். ஆகவே அந்த தண்ணீர் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு பிரிந்தது. அவருடைய வல்லமையைக் கண்டு, அவருடைய அற்புதங்களைக் கண்டு, இயேசுவைப் பின்பற்றுகின்ற சபையின் நிழல். 77ஆகவே ஒரு நாள் அவரிடம் கேட்கப்பட்டது. யாரோ கூறினர். ஒரு ஸ்திரி கூறினாள். ''என் குமாரன் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும்'' அவர், ''நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்களா?'' என்றார். அவள் “ஆம்” என்றாள். ' அவர், ''நான் எதனுடன் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேனோ நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா?'' என்றார். அவள், “ஆம்'' என்றாள். அவர், ''உண்மையாக, உங்களால் கூடும்; ஆனால் அந்த வலது பாரிசமும் இடது பாரிசமும் எனக்கல்ல...'' என்றார். வேறு விதமாகக் கூறினால், ''நான் கொண்டிருக்கின்ற அதே ஸ்நானத்தை (Baptism) நீங்களும் கூட பெற்றிருப்பீர்கள்.'' 78ஆகவே சபை அவரை கவனித்துக் கொண்டிந்தபோது, அவர் பெந்தெகொஸ்தேவிற்குச் சென்றபோது .... அவர் மேலறைக்குச் சென்று இராப்போஜனம் செய்தார். கல்வாரிக்குச் சென்றார், சிலுவையிலறையப்பட்டார். ஆகவே பிறகு சபையானது வெளியே அழைக்கப்பட்ட பிறகு, அவர் தம்முடைய உயரே எடுத்துக் கொள்ளப்படுதலில் மேலே சென்ற போது சபை அவரையே கவனித்துக்கொண்டியிருந்தது. அவர், ''இப்பொழுது, எனக்கு சாட்சியாயிருக்கத்தக்கதாக, நான் உங்களை உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பப் போகிறேன். ஆனால் நீங்கள் செல்வதற்கு முன்னர் எருசலேம் பட்டணத்தருகே காத்திருங்கள்; ஏனெனில் என் மேல் இருக்கின்ற அதே பரிசுத்த ஆவியாகிய சால்வை உங்கள் மீது இறங்கப்போகின்றது. நான் அதை உங்களுக்கு திரும்ப அனுப்பப்போகிறேன்'' என்று கூறினார். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார் ஆசி). ஆகவே அவர்கள் எருசலேம் நகரத்திற்குச் சென்றபோது, அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டனர். அல்லேலூயா! ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார், என்கின்ற என்னுடைய சாட்சிகளாக பிறகு நீங்கள் இருப்பீர்கள்.'' 79ஆகவே தீர்க்கதரிசி எலிசா, எலியாவின் மேல் இருந்த அதே பரிசுத்தஆவி, இரட்டிப்பானபங்காய் எலிசாவின் மேலும் இருந்தது. ஆகவே இன்றிரவு, பரிசுத்தஆவியின் அபிஷேகம் நம் மேல் விழுந்து நமக்கு மூடுதிரையாகி அவருடைய ஆவிக்குள் நம்மைஸ்நானம் பண்ணுவித்து, அவருடையஆசீர்வதிக்கப்பட்ட பாத்திரத்தின் விளிம்பை முத்தமிட்டு அவருடைய சாட்சியாக வெளியேசெல்ல உரிமை கோருகிற தேவனுடைய சபையாக சகோதரனாக, சகோதரியாக நாம் இருக்கிறோம். எப்பக்கத்திலும் அழிவும் சீர்கேடும் இருக்கின்ற இந்த நாளில்நாம் எப்படி சும்மா இருக்க முடியும்! நாம் நின்று சத்தியத்திற்காக சாட்சி பகரக்கடவோம். ஆமென். அற்புதம்! ஓ, என்னே. நான் முடிக்கவேண்டும். சரியாக இப்பொழுது ஆரம்பித்து பிரசங்கிக்கவேண்டும் போலிருக்கின்றது, நான் விசுவாசிக் கிறேன். நான் - நான் நலமாகஉற்சாகமுள்ளவனாக இருப்பதை உணருகிறேன். 80அந்த சால்வை , இரட்டிப்பான பங்கு இயேசு கூறினார், ''நான் செய்கின்ற காரியங்களை விட இன்னும் அதிகமானவைகளை நீங்கள் செய்வீர்கள். அதை விட இன்னும் அதிகமாக இரட்டிப்பான பங்கு. ''நீங்கள் இரட்டிப்பான பங்கைப் பெற்றபிறகு எனக்கு சாட்சிகளாய் இருக்கிறீர்கள் அவரையே நாம் கவனித்துக் கொண்டிருப்போம். உங்கள் கண்களை அவர் மீது வைத்திருங்கள். அந்த சால்வை கீழே இருக்கிறது. அந்த சால்வை இன்றிரவு இங்கே இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவி, இன்றிரவு இங்கிருக்கின்ற எந்த விசுவாசியையும் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் உடுத்துவிக்க இங்கே இருக்கின்றது. பிறகு நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், நீங்கள் செல்லும் இடமெங்கிலும் அவருடைய சாட்சியாக இருப்பீர்கள். “நேற்றும் இன்றும், என்றும் மாறாதவர்.'' காத்திருங்கள் பிலிப்பு சென்று பிரசங்கித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த சிறிய மனிதனாகிய ஸ்தேவானை கல்லெறிந்த போது அவன் பரலோகத்திற்குள் உற்றுப்பார்த்தான்; அவனுடைய தலையின் இரு பக்கத்திலும் கற்கள் வந்து விழுந்து அவனுடைய சிறிய மூளைகளை நொறுக்கி குழைந்து நிலத்தின் மேல் விழும் படிக்குச்செய்தன, அவன் அண்ணாந்து பார்த்து அதோ, வானங்கள் திறந்திருக்கிறதையும் இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்'' என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவன் ஒரு சாட்சியாயிருந்தான். 81பவுல் அங்கே தன்னுடைய வழியில் சென்றுகொண்டிருந்த போது, ஒரு ஒளி அவனுக்கு முன்பாக விழுந்த போது அவனுடைய கண்கள் குருடானது. ஆகவே அவன், ''கர்த்தாவே, நான் யாரை துன்புறுத்துகிறேன்?'' என்றான். அவர் ''இயேசு' என்று கூறினார். ஆகவே அவர், ''நேர்த் தெருவு என்னப்பட்ட தெருவுக்கு போ'' என்றார். தரிசனங்களைக் கண்ட ஒரு பிரசங்கியை அவர் அங்கே கொண்டிருந்தார். ஆதலால் அவர்... அனனியா என்னும் பெயரையுடையவனாக இருந்தான். ஆகவே பவுலைக் குறித்த ஒரு தரிசனத்தை அனனியா கண்டான். ஆகவே அவன் சென்று அவன் மேல் கைகளை வைத்து சகோதரனாகிய சவுலே வழியிலே உன்னை சந்தித்த கர்த்தராகிய இயேசு, நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் படிக்கும் நான் வந்து உன் மேல் கைகளை வைக்க என்னை அனுப்பியுள்ளார். ஏனெனில் அவருக்காக நீ ஒரு மகத்தானசாட்சியாக இருக்கவேண்டும் என்று அவர் எனக்கு காண்பித்தார்'' என்று கூறினான். ஒரு சாட்சி! முதலாவதாக, என்ன? ''உன் பார்வையைப் பெறு, பிறகு பரிசுத்த ஆவியைப் பெறு.“ அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் விழுந்தது. அவன் எழுந்து தமஸ்கு நதிக்குச்சென்று ஞானஸ்நானம் பெற்றான். அங்கே ஒரு அருமையான சமயத்தை உடையவர்களாய் இருந்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன்! நீங்களும் தானே [சபையார்''ஆமென்' என்கின்றனர் - ஆசி. 82“அங்கேயிருந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தையெல்லாம்” சவுல் கைது செய்யும்படியான கட்டளைகளைத் தன் சட்டைப் பையில் உடையவனாய் சாலையில் சென்று கொண்டிருந்தான். அச்சுறுத்திக் கொண்டிருந்தான் அவனுடைய உயரமான குதிரையின் மேலிருந்து அவனை தேவன் கீழே தள்ளினார். அந்த மக்கள் எதை கொண்டிருந்தனரோ அதற்கு அவனை ஒருசாட்சியாக அவர் ஆக்கினார். ஓ, என்னே. இன்றிரவு, இவ்விதமாகவே உயர்ந்த குதிரையிலே சவாரி செய்து கொண்டிருக்கிற ஜனங்கள், சாட்சிகளாக இருக்கும்படி யாக, கீழே தள்ளப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார் களல்லவா? 83காலை நேரத்தில் வானத்திலிருந்து பனித்துளி விழுகையில், நான் அதைக் கண்டிருக்கிறேன். ஆகவே சூரியன் எழும்பி வருகையில், அந்த சிறிய பனித்துளி , ஒரு சிறிய நட்சத்திரத்தை போன்று பிரகாசிப்பதை நீங்கள் கவனியுங்கள். அது என்ன? அது ஒரு சாட்சியாகும். அந்த சூரியன் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எழும்பி வருகையில், அது மறுபடியுமாக செல்லப்போகின்றது என்பதை அது அறிந்திருக்கின்றது. அந்த ஈரமானது , மேலே சென்றுவிடும். ஏன்? ஒரு சமயத்தில் அது மேலே இருந்தது. அது கீழே விழுந்தது. அது மறுபடியும் மேலே செல்கின்றது. அது மேலே இழுக்கப்பட்ட இந்த சூரிய வெளிச்சத்தின் சாட்சியாக அது இருக்கின்றது. அது எங்கோ இருந்தது. அது என்ன என்பதைக் குறித்து அதற்கு தெரியும். தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதன் அல்லது ஸ்திரீயும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலைக் குறித்த சாட்சியாக இருக்கின்றனர். இன்றிரவு தேவனுக்கு சில சாட்சிகள் தேவையாயிருக்கிறதல்லவா! 'நீங்கள் உலகமெங்கும் போய், ஒவ்வொரு சந்ததிக்கும், எல்லா ஜனங்களுக்கும் எனக்கு சாட்சியாயிருங்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடன் கூட எப்பொழுதும் இருப்பேன்.'' பரிசுத்த ஆவியானவர் தாம் இந்த சில வார்த்தைகள் உங்கள் ஆத்துமாவிற்குள் ஆழத்தில் ஊறும்படி செய்வாராக, ''பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது, நீங்கள் பெலனடைந்து, பிறகு நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும் உலகத்தின் கடைசிப்பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.'' 84நாம் நமது தலைகளை தாழ்த்துவோம்; சகோதரியே, ஆர்கன் இசைக் கருவிக்கு நீங்கள் வருகிறீர்களா? எவ்விடமும், ஜெபத்தில் சிறிது நேரம் நமது தலைகளைத் தாழ்த்துவோம். எல்லாரும் இப்பொழுது உங்களால் இயன்ற வரையில் பயபக்தியாக இருங்கள். பீட அழைப்பு கொடுக்கப்படுகையில் நீங்கள் ஜெபத்தில் தரித்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இரவும் இங்கிருந்து, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக, தெய்வீக அபிஷேகத்தை அளிக்கின்றார். இன்றிரவு, நீங்கள் இங்கேயிருந்து கர்த்தருடைய உயிர்த்தெழுந்த வல்லமைக்கு சாட்சியாக மாற நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் வல்லமையால் நிரப்பப்படும் வரை...ஜெபத்தில் நினைவு கூறப்பட நீங்கள் விரும்புகிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கட்டிடமெங்கிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒ, என்னே அது அற்புதமானதல்லவா. ''நீதியினிமித்தம் பசிதாகப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிரப்பப்படுவர்.'' 85இன்றிரவு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இக்கட்டிடத்தில் இருக்கிறார்களா, அவர்கள் “சகோதரன் பிரான்ஹாம், எனது உயர்த்தப்பட்டகரம் .... இப்பொழுது இங்கே பீடத்தைச் சுற்றிலும் ஜனங்கள் திரளாக குவிந்துள்ளனர், ஆனால் நான் என் கரத்தை உயர்த்தி எனக்காக ஜெபியுங்கள் என்று கூறப்போகிறேன். நான் ஒரு பாவி . ஆகவே இங்கே தேவன் என்னுடைய கரத்தை காணவேண்டும். நான் அவரை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள நான் - நான் விரும்புகிறேன்?'' என்று கூறட்டும். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் வலது பக்கத்தில் இருக்கின்ற யாரோ ஒருவர்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா. அங்கே மேலிருக்கின்ற உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. இங்கே இருக்கின்ற மற்றுமொருவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமானது. நான் அவருடைய சாட்சியாக ஆக விரும்புகிறேன் . உங்களுடைய கரத்தையுயர்த்தி, சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள். ஜெபத்தில் நான் நினைவு கூறப்பட்ட நான் விரும்புகிறேன்'' என்று கூறுகிறவர் உண்டா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே உயர்த்தப்பட்டிருக்கின்ற உம்முடைய கரத்தோடு நான் உங்களைக் காண்கிறேன். அங்கே அந்த கடைசியில் இருக்கின்ற வாலிபனே உன்னை நான் காண்கிறேன். உயர்த்தப்பட்ட உன்னுடைய கரத்தோடு உன்னை நான் காண்கிறேன். எழுப்புதல் கூட்டத்தின் முடிவாக, இன்றிரவில், இந்த சிறிய ஜனக்கூட்டமெங்கிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நமக்கு எப்படித் தெரியும் .... தன் கரங்களை உயர்த்தியுள்ள மற்றுமொரு சீமாட்டி இங்கிருக்கிறார்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நமக்கு எப்படித் தெரியும்? சிறிய பிரான்ஹாம் கூடாரம் கொண்டிருக்கின்ற கடைசி எழுப்புதல் கூட்டமாக இது இருக்கலாம் அல்லவா? 86இன்று இருபதிற்கு மேற்பட்ட வயதில் இருந்த வாலிப ஸ்திரீயின் உறைந்த உருவம் அருகில் அங்கே அந்த குளிரில் நான் நின்று கொண்டிருந்தேன். அவளைக் கல்லறைக்கு எடுத்து அங்கே அடக்கம் செய்தேன். அவளுடைய சிறிய பையன்கள் தந்தையோடு நின்று கொண்டிருந்தனர். அந்த சிறிய பையன்கள் சவப்பெட்டியண்டை நடந்து சென்றனர். தந்தை, 'சென்று வருகிறேன்' குட்-பை என்று அம்மாவிடம் கூறுங்கள்'' என்று கூறினார். அவர்கள் அங்கே கிடத்தப்பட்டிருந்த தங்கள் மரித்த தாயிடம் சென்று, சிறிய கரங்களை அசைத்து, அம்மா குட்-பை'' என்றனர். அவர்களுடைய பழுப்பு நிறக் கண்கள் கண்ணீரால் நிறைந் திருந்தது, தங்கள் கைகளால் தங்கள் சிறிய முகங்களை மூடிக்கொண்டிருந்தனர். ஓ, அந்தத் தாய் என்றென்றுமாக சென்று விட்டிருந்தாளென்றால் எவ்வளவு துயரமாக இருந்திருக்கும் அல்லவா? ஆனால் தேவனுடைய கிருபையால் இங்கே இந்தகூடாரத்தில் அவள் இரட்சிக்கப்பட்டாள். அவள் அந்த தீர்மானத்தை செய்த அந்த இரவு, அவள் முன்னே நடந்து வந்தாள், இப்பொழுது அது ஒன்று தான் நம்பிக்கையளிக்கிற தாயிருக்கின்றது. கடந்த வாரம் அவள் இங்கே பட்டணத்தில் திடகாத்திரம் வாய்ந்தவளாக, ஆரோக்கியமாக இங்குமங்கும் சென்று கொண்டிருந்தாள், கூட்டத்திற்குவர எத்தனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நோயுற்றாள். மரித்துப்போனாள். 87பொதுத்துறை நிறுவனத்தில் வேலையிலிருந்த, என்னுடைய இரண்டு நண்பர்கள், நேற்றைய தினத்தில் ஒரு விபத்திற்குள்ளாகி,மருத்துவமனையில் படுத்துக்கிடக்கின் றனர். அந்தப் பெண் இப்பொழுது மரித்துக்கொண்டிருக் கின்றாள். நான் அவளுடன் பதினேழாண்டுகள் வேலை செய்திருக்கிறேன். விபத்தின் வேகத்தால் அவளுடைய இருதயம் மறுபக்கம் திரும்பி விட்டிருக்கிறது. துணைநிலைய இயந்திர இயக்குநர்களில் ஒருவர் அங்கே படுத்துக்கிடக்கின்றார். அவர் என்னுடைய நண்பர். காடுகளில் மரக்கட்டையின் மேல்உட்கார்ந்து கொண்டு அநேக நாள் அவரிடம் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பேசுவேன். ஜீவன் போவதற்கு முன்னர், நான் இப்பொழுது அவரைப் பார்த்து அவருடன் பேச விரும்புகிறேன். பாருங்கள் அவருக்காக ஏதாவதொன்றை கர்த்தர் நம்மிடம் கூறுவார். 88நான் ஆச்சரியமுறுகிறேன். பாவிகளாய் இருந்து தங்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள, ஜெபத்தில் நினைவு கூறப்பட்ட விரும்புகின்றவர்கள். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்களா? இப்பொழுது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா என்று நான் ஆச்சரியமுறுகிறேன். இப்பொழுது நீ இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவாசித்தாயானால்? ஜெபத்தில் இருங்கள். ஒவ்வொரு மயிரும்... ஒவ்வொரு தலையும் வணங்கியிருக்கட்டும். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து உங்களை இரட்சித்தார் என்று நீங்கள் விசுவாசித்தால், ஒரு சாட்சியாக இப்பொழுது எழுந்து நில்லுங்கள். தங்கள் கரத்தை உயர்த்தியுள்ள எந்த ஒரு மனிதனும், கர்த்தாவே——- என்று நீர் எனக்கு வாக்குரைத்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் விசுவாசித்து உம்மை என் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறட்டும் நீங்கள் நிற்பீர்களா? நாம் இங்கே இடத்திற்கும்நேரத்திற்கும் நாம் சிறிது நெருக்கப்படுகிறோம். சகோதரனே, தேவன்உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியேநின்றவாறே இருங்கள். உங்களால் நிற்கக்கூடுமானால் நில்லுங்கள். இன்னும் யாராவது நிற்பீர்களா? இப்பொழுது யாராவது நிற் கிறீர்களா? உங்களால் கூடுமானால் அப்படியேநின்று கொண் டிருங்கள். கட்டிடத்தில் உள்ள எல்லா இடங்களிலும், ஜெபத்தில் இருங்கள். .. 89கர்த்தாவே இப்பொழுது உதவும். ஓ தேவனே பாவிகளை மன்னியும். இங்கே இப்பொழுது நின்றுகொண்டிருக்கின்ற இவர்களை என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை'' என்ற நீர் கூறியிருக்கின்றீர், சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியே நின்று கொண்டிருங்கள். இன்னும் யாராவது ? உங்கள் கையை உயர்த்தியுள்ள நீங்கள், தேவனே பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். கிறிஸ்துவின் நிமித்தம் என்னை இரட்சியும்'' என்று கூறுங்கள். அவர் சரியாக அங்கே அதைச் செய்வார். பிலிப்பு கூறினான்... ''இதோ தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?“ பிலிப்பு, நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை'' என்று கூறினான். இப்பொழுது அவரை உங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஆகவே நீங்கள் எழுந்து நின்று மனிதர் முன் அவரைக் குறித்து சாட்சியிடுவீர்களானால், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் உங்கள் பிதாவின் முன்பாகவும் உங்களைக் குறித்து அவர் சாட்சியிடுவார். அவர் உங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டி ருக்கிறார். நீங்கள் ஒரு சாட்சியாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஒரு பாவி என்றால் எழுந்து நில்லுங்கள். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே யாரோ, ஒரு மனிதனும் அவர் மனைவியும் இங்கே .... ஒருவரையொருவர் அணைத்து, கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றனர். இன்னும் யாராகிலும்? இங்கே இந்தக் கட்டிடத்தில் பரிசுத்த ஆவியானவர் பிரசன்னராக இருக்கையில், இப்பொழுது துரிதமாக நீங்கள் எழுந்து நிற்பீர்களா? “'இப்பொழுது கிறிஸ்துவை என் இரட்கராக நான் எற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்காக நீங்கள் ஜெபிக்க நான் விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். 90கட்டிடத்தில் தங்கள் கன்னங்களில் கண்ணீர் விழுந்தவாறே அவர்கள் நின்று கொண்டிருக்கையில், அதைத்தான் நான் செய்யப்போகிறேன். நீங்கள் எழுந்து நிற்பீர்களா? கவனியுங்கள். ஒவ்வொருவரும் பயபக்தியாக யாரும் இங்குமங்கும் அசையாமல் உள்ளனர். நீங்கள் தயவு கூர்ந்து ஜெபத்தில் தரித்திருப்பீர்களானால். கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது மக்களுடன் இடைபடுகின்றார். எது உங்கள் கரத்தையுயர்த்தும்படிச் செய்தது? தேவன் அதைச் செய்தாலொழிய உங்களால் உங்கள் கரத்தை உயர்த்த முடியாது. இயேசு, ''பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒரு மனிதனும் என்னிடத்தில் வரமாட்டான்.'' என்றார். பாவியாகிய நண்பனே, அந்த ஜனங்கள், நான் பேசியிருக் கின்ற ஜனங்கள், ''நான் தேவனில் விசுவாசம் வைத்திருப்பதில்லை. அதற்கு எனக்கு நேரம் கிடையாது. ஒரு தடவை நான் அதை முயற்சித்தேன். என்னால் .... அதில்அதை நான் வாஞ்சித்ததேயில்லை'' என்று கூறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்களானால். தேவன் இன்றிரவில் அந்த வாஞ்சையை உங்களுக்கு அளித்திருக்கிறார். ஒரு கிறிஸ்தவனாகுங்கள். அவரை திருப்பி விடாதீர்கள். 91பியானோ , ஆர்கன் வாசிப்பவரே, உங்களால் கூடுமானால், அவரை திருப்பி அனுப்பாதே, அது சரி நீங்கள் உங்கள் தீர்மானத்தைச் செய்கையில்.. அவரை திருப்பி அனுப்பாதே அவரை திருப்பி அனுப்பாதே நீ வழிவிலகி சென்றிருந்தாலும், அவர் மறுபடியும் உன் இருதயத்திற்கு வந்திருக்கிறார்; (சகோதரன் பிரான்ஹாம் அமைதியாக ஜெபிக்கிறார் - ஆசி) அந்த நித்தியநாளில்... உன் இரட்சகரை உன் இருதயத்தினின்று திருப்பாதே; அவரை திருப்பி அனுப்பாதே, ஓ, ''நன்றாக செய்தாய் அவர் சொல்வது உனக்கு எப்படிப்பட்ட தேவையாயிருக்கும். நீ இப்பொழுது எழுந்து, ''நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறுவாயா? அங்கே நிற்கின்ற சகோதரியே, அதைக் குறித்தென்ன? உன் , பாவத்தை அவர் மன்னிக்கின்றார் என்று நீ விசுவாசிக்கிறாயா? ஒவ்வொருவரும் உங்கள் தலைகள் வணங்கியிருக்கையில். இயேசு கிறிஸ்து உங்கள் இருதயத்தை தட்டிக்கொண்டிருக்கிறார், இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எழுந்து நின்று, “நான் இப்பொழுது, கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறுவீராக. ஜெபத்திற்காக நீங்கள் எழுந்து நிற்பீர்களா? அங்கே இருக்கின்ற வாலிபனே, அதைக் குறித்தென்ன? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னாலிருக்கின்ற கரத்தையுயர்த்தியுள்ள வாலிப ஸ்திரீயே, உன்னைக் குறித்தென்ன? இப்பொழுது நீங்கள் எழுந்திருப்பீர்களா? உங்கள் காரியத்தை பரிந்துரைக்கும் அந்த நித்திய நாளில் அவர் தேவை உன் இரட்சகரை உன் இருதயத்தினின்று திருப்பாதே; அவரை திருப்பி அனுப்பாதே. 92நாம் அந்தப் பல்லவியை மறுபடியுமாகப் பாடுகையில் நிற்கிற நீங்கள் சரியாக பீடத்தின் அருகே இங்கே நடந்து வருவீர்களானால், உங்களுடைய கையை குலுக்கி உங்களுடன் நான் ஜெபிக்கட்டும். நீங்கள் வருவீர்களா? உங்களில் மற்ற எல்லாரும் வருவீர்களா? அங்கே பின்னால் கையை உயர்த்தியிருக்கின்ற உங்களைக் குறித்தென்ன, நீங்கள் இங்கே வரலாமே? இங்கே வாருங்கள். கணவன் மனைவியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். இங்கே நடந்து வாருங்கள். சகோதரனே, சகோதரியே நான் உங்கள் கையை குலுக்க விரும்புகிறேன். உன் இருதயத்திற்கு... (சகோதரனே அவர்களுடன் வாருங்கள்) ... நீ வழிவிலகி சென்றிருந்தாலும்; ஓ, உங்கள் காரியத்தை பரிந்துரைக்க அந்த நாளில் ... (நீங்கள் வருவீர்களா ) உன் இரட்சகரை உன் இருதயத்தினின்று திருப்பாதே அவரை திருப்பி அனுப்பாதே, இப்பொழுது, நண்பனே, அதைக் குறித்து சிந்தித்துப் பார். காலைக்கு முன்னே, ஒருக்கால் உன் ஆத்துமா, ஒரு பல் பிடுங்கி எடுக்கப்படுவதுபோல் உன் சரீரத்திலிருந்து எடுக்கப்படும். அங்கே விண்வெளியினூடே, முடியாத முடிவிற்குச் செல்லும் அந்த மகத்தான, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாளிலே, இப்பொழுது யார் உன் காரியத்திற்காக பரிந்துரைக்கக் கூடும்? நீ வருவாயா? இந்த உயிர்த்தெழுந்த நாளில் உங்களால் செய்யக் கூடிய சிறிய காரியமானது, நீங்கள் வந்து, கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்.'' என்று கூறுவதேயாகும்., 93(பீடத்தினண்டையில் இருக்கிறவர்களோடு சகோதரன் பிரான்ஹாம் தொடர்ந்து ஜெபிக்கின்றார். ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) பிரசங்கித்து இந்த மற்ற மனிதர் பிரசங் கிப்பதை கேளும். அதன் உறுதிப்படுத்தலாக, தேவன் இங்கே இருக்கிறார். “அதன் மேல் என் ஒப்புத்லின் முத்திரையை பதித்திருக்கிறேன். அதுதான் சத்தியம் ஆகும்'' என்கிறார். அது அவருடைய சுவிசேஷம். உங்கள் முழு இருதயத்தோடும் இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் அழைப்பை விடுக்கையில், இங்கே பின்மாற்றக்காரர் இருந்து, ''சகோதரன் பிரான்ஹாம், சரியாக இப்பொழுது என்னை நினைவுகூரும். நான் என் கையை உயர்த்துகிறேன். ஜெபத்தில் என்னை நினைவுகூரும் என்று கூறுவாயா? கவனி, இந்த நாட்களில் ஒரு நாளில் நீ கடந்து சென்று, இயேசு கிறிஸ்துவை சந்திக்கப் போகிறாய்.